அபிநந்தனின் பெற்றோருக்கு விமானத்தில் அமோக வரவேற்பு!

அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுகிறார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்

அபிநந்தனின் பெற்றோருக்கு விமானத்தில் அமோக வரவேற்பு!
அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுகிறார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்
  • News18
  • Last Updated: March 1, 2019, 12:29 PM IST
  • Share this:
டெல்லி செல்ல விமானத்தில் ஏறிய அபிநந்தனின் பெற்றோரை பயணிகள் எழுத்து நின்ற வரவேற்றனர்.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இதற்கிடையில் பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்.

அவரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அவரை விசாரணை செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டனர். இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தனை உடனே இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ‘அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுகிறார்’ என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து இன்று அபிநந்தன் விடுதலை செய்யப்படுகிறார்.அவரை வரவேற்க அவரது பெற்றோர் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக விமானத்தில் ஏறிய போது பயணிகள் எழுந்து நின்று கைகளை தட்டி அவர்களை வரவேற்றனர்.

 
First published: March 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading