பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை செய்த கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மோசினின் பணியிடை நீக்கத்துக்கு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
கர்நாடகா மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரியான முகமது மோசின், ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.
அவர், கடந்த 17-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஒடிசா மாநிலம் சம்பல்பூர் வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தினார்.
இதையடுத்து, விதிகளை மீறி முகமது மோசின் செயல்பட்டதாகக் கூறி, அவரைத் தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்தது.
இதை எதிர்த்து முகமது மோசின் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருப்பு பூனைப் படை பாதுகாப்பில் உள்ளவர்களின் வாகனங்களைச் சோதனையிடக் கூடாது என்று விதிகள் இல்லை என்றும், பிரதமரின் ஹெலிகாப்டரில் பெட்டிகள் இறக்கப்பட்டு வேறு வாகனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தது.
தேர்தல் நடக்கும் நேரத்தில், இது போன்ற தகவல் கிடைத்தால் யாராக இருந்தாலும் சோதனை மேற்கொள்ள வேண்டியது அதிகாரியின் கடமையெனக் குறிப்பிட்ட தீர்ப்பாயம், பணியிடை நீக்க உத்தரவுக்குத் தடைவிதித்துள்ளது.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.