• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மத்திய அமைச்சரவை மாற்றம்- யாருக்கு என்ன பதவி: முழு தகவல்!

மத்திய அமைச்சரவை மாற்றம்- யாருக்கு என்ன பதவி: முழு தகவல்!

புதிய மத்திய அமைச்சரவை

புதிய மத்திய அமைச்சரவை

புதிதாக மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அஸ்வினி வைஷ்னவுக்கு ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பம் & தொலைத்தொடர்பு ஆகிய இரண்டு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

  • Share this:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை  இன்று மாற்றியமைக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு மே மாதம் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. அதன் பின்னர் மத்திய அமைச்சரவை பெரிதாக மாற்றப்படவில்லை. இந்நிலையில், மத்திய அமைச்சரவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.  இதன் காரணமாக ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட 12 பேர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 43 பேர்  மத்திய அமைச்சராக பதவியேற்றனர்.

பிரதமர் மோடி வசம் பணியாளர், பொது குறைகளை மற்றும் ஓய்வூதிய அமைச்சம், அணுசக்தி, வான்வெளி போன்ற துறைகள் உள்ளன.  ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சராக தொடர்கிறார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைச்சகம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதின் கட்கரி -சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்

நிர்மலா சீதாராமன் – மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர்

நரேந்திர சிங் தோமர் – வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர்

ஜெய்சங்கர்- வெளியுறவுத்துறை அமைச்சர்

அர்ஜூன் முண்டா- பழங்குடியின நலத்துறை அமைச்சர்

பெரிய மாற்றங்கள்

புதிதாக மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அஸ்வினி வைஷ்னவுக்கு ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பம் & தொலைத்தொடர்பு ஆகிய இரண்டு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த  ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும்  ரசாயணம் & உர அமைச்சகம் ஒன்றாக இணைக்கப்பட்டு  அதன் அமைச்சராக   மன்சுக் மாண்ட்வியா நியமிக்கப்பட்டுள்ளார்.

புர்சோத்தம் ரூபாலாவுக்கு மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய கல்வித்துறை மற்றும் திறன் வளர்ப்பு ஆகிய துறைகளை தர்மேந்திர பிரதான் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களின் அமைச்சராக நாராயண் ரானே நியமிக்கப்பட்டுள்ளார்.  கிரன் ரிஜ்ஜூ சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புறம், மத்திய பெட்ரோலியத்துறை ஆகிய இரண்டு அமைச்சகம் ஹர்திப் சிங் பூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பியூஷ் கோயல் வர்த்தகத்துறை உடன்,  நுகர்வோர் மற்றும் உணவுநலன் மற்றும் ஜவுளித்துறையை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தில் ஈடுபாடு மற்றும் ஆர்வம் கொண்டவரும் அதன் பின்னணியை கொண்டவருமான மீனாட்சி லேக்கி, வெளிவிவகார மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஆகிய இரண்டு துறையின் அமைச்சராக  அனுராக் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். கிரிராஜ் ராஜ் சிங் கிராம அபிவிருத்தி அமைச்சகத்தை நிர்வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பசுபதி பராஸுக்கு உணவு பதப்படுத்தும் அமைச்சகம்  வழங்கப்பட்டுள்ளது. பூபேந்திர யாதவ் தொழிலாளர் அமைச்சகம் மற்றும்  சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: