ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஏமாற்றுவதும், கட்சி மாறுவதும் அரசியலில் சகஜம்: காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஓபன் டாக்!

ஏமாற்றுவதும், கட்சி மாறுவதும் அரசியலில் சகஜம்: காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஓபன் டாக்!

டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார்

சிவக்குமார் கூறுகையில், ஒரு கட்சிக்கு போவதும், திருப்பி வருவதும் பெரிய விஷயமல்ல. எனவே அந்த 17 பேர் மட்டுமல்ல, யார் வேண்டுமென்றாலும் காங்கிரஸுக்கு திரும்பி வரலாம் என்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஏமாற்றுவதும், கட்சி மாறுவதும் அரசியலில் சகஜம் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஓபனாக பேசியிருக்கிறார்.

‘அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா’ என்ற நடிகர் கவுண்டமனி பேசும் காமெடி டயலாக் மிகவும் பிரபலமானது. அதே போல அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பரும் கிடையாது என்ற சொல்லும் அரசியல் நிலையை எடுத்துரைப்பதாக உள்ளன. இவற்றை மெய்ப்பிப்பது போல கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவரின் பேச்சு அமைந்துள்ளது.

2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சிசெய்து வந்த நிலையில், 17 எம்.எல்.ஏக்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்கள் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ததால் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. புதிய முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்றார்.

Also Read:   சுனில் கவாஸ்கரின் உலக சாதனையை முறியடித்த சச்சினுக்கு தங்க கைக்கடிகாரம் பரிசு - சுவாரஸ்ய நினைவலைகள்!

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழக் காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்கள் தற்போது பாஜகவில் உள்ள நிலையில், இவர்களை மீண்டும் காங்கிரஸில் சேருமாறு மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள அவரின் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவக்குமார் கூறுகையில், “ஏமாற்றுவதும், கட்சி மாறுவதும் அரசியலில் பொதுவானது. இதற்கு நானோ, காங்கிரஸ் கட்சியோ விதிவிலக்கல்ல. எல்லா கட்சிகளிலும் இது போன்ற உதாரணங்கள் நிகழ்ந்துள்ளன. நாங்கள் பாஜகவில் இருந்து பிரதாப் கவுடா பாட்டிலை கூட்டி வந்தோம். ஒரு கட்சிக்கு போவதும், திருப்பி வருவதும் பெரிய விஷயமல்ல. எனவே அந்த 17 பேர் மட்டுமல்ல, யார் வேண்டுமென்றாலும் காங்கிரஸுக்கு திரும்பி வரலாம்.

Also Read:   பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மதிக்கும், ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு தனிநபரும் எங்கள் கட்சியில் இணைவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் கட்சிக்கு வரவேண்டும் என விண்ணப்பம் வந்தால் மாவட்ட, பகுதி அளவில் கருத்து கேட்கப்படும். கட்சியின் தொண்டர்களுடைய கருத்தும் கேட்கப்படும் ஆனால் முடிவு என்பது மாநில தலைமை எடுப்பதே. தனிநபரின் கருத்தை விட மாநில தலைமையின் முடிவு முக்கியமானது” இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

Also Read:   பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்தும் அரசியல் பிரமுகர்: வீடியோ வெளியானதால் சர்ச்சை!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆங்கில தினசரி செய்தித்தாள் ஒன்றில். டி.கே.சிவக்குமார் குறித்த முழுப்பக்க விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் அவர் கொரோனா காலத்தில் ஈடுபட்ட செயல்கள் குறித்த விவரம் இடம்பெற்றிருந்தது. இது தனிநபர் புகழ்பாடுவதாகும் என பாஜகவினர் மட்டுமல்லாது வேறு கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் வந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2023 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக சிவக்குமார் களமிறங்குவதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:

Tags: BJP, Congress, Karnataka