பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசிய சேகுவேராவின் மகள் அலெய்டா!

நாடு விடுதலையடைந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட அரசப் பொறுப்பை வாங்க மறுத்து பிற நாடுகளின் விடுதலைக்காகப் போராடப் போவதாக கூறிச் சென்றவர் சேகுவேரா.

பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசிய சேகுவேராவின் மகள் அலெய்டா!
சேகுவேரா
  • Share this:
கியூபா நாட்டின் விடுதலைக்குப் பெரும் பங்காற்றிய சேகுவேராவின் மகள் அலெய்டா சேகுவேரா இன்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.

இலத்தின் அமெரிக்கா நாடான கியூபா அமெரிக்காவின் பிடியில் இருந்தபோது, பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து அந்நாட்டின் விடுதலைக்கு ஆயுதப் புரட்சியை மேற்கொண்டவர் சேகுவேரா.

நாடு விடுதலையடைந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட அரசப் பொறுப்பை வாங்க மறுத்து பிற நாடுகளின் விடுதலைக்காகப் போராடப் போவதாக கூறிச் சென்றவர் சேகுவேரா. உலக அளவில் சேகுவராவுக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் செல்வாக்கு இருந்துவருகிறது.


கேரளா மாநிலம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேகுவேராவை முக்கியத் தலைவராகப் பார்க்கின்றனர். இந்தநிலையில், நேற்று டெல்லி வந்திருந்திறங்கிய சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, விமானம் மூலம் நேற்றிரவு திருவனந்தபுரம் சென்றார். இன்று மதியம் பினராயி விஜயன் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். கேரளாவில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடக்கவுள்ள மாநாட்டில் அலெய்டா குவேரா பங்கேற்கவுள்ளார்.

Also see:

First published: July 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading