• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘250 கிமீ தூர பயணத்துக்காக பிரைவேட் ஜெட்’ - சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர்கள்

‘250 கிமீ தூர பயணத்துக்காக பிரைவேட் ஜெட்’ - சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர்கள்

private jet

private jet

சாதாரண மனிதனுக்கு துணை இருப்பதாக கூறிய காங்கிரஸ் தலைவர்கள் சண்டிகரில் இருந்து டெல்லிக்கு 250 கிமீ தூர பயணத்துக்காக தனி விமானத்தில் சென்றுள்ளனர்.

  • Share this:
பஞ்சாப் முதல்வர், நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நான்கு பேர் தனி விமானத்தில் பயணம் செய்தது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. எதிர்கட்சியினர் விமர்சித்தது மட்டுமல்லாது காங்கிரஸ் தலைவரும் விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வராக சரன்ஜித் சிங் சன்னி தேர்வான பின்னர், சாதாரண நபரான தன்னை முதல்வராக தேர்ந்தெடுத்ததற்காக காங்கிரஸ் தலைமைக்கு அவர் நன்றி தெரிவித்த சில மணி நேரங்களுக்கு பின்னர் 250 கிமீ தொலைவில் உள்ள டெல்லிக்கு சரன் ஜித், நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட 4 காங்கிரஸ் தலைவர்கள் தனி விமானத்தில் பயணம் செய்திருக்கின்றனர். ஆம் ஆம்தி, ஷிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட எதிர்கட்சியினர் இதனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து திடீரென கடந்த வாரம் ராஜினாமா செய்தார் கேப்டன் அமரிந்தர் சிங். அவரைத் தொடர்ந்து புதிய முதல்வராக சரன்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்தது.

இதனையடுத்து பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பதற்காக முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி, துணை முதல்வர்களான சுக்ஜிந்தர் சிங் ரந்த்வா, ஓபி சைனி மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகிய நால்வரும் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இருந்து டெல்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்து டெல்லி சென்றுள்ளனர்.

Also Read:  8 நாளில் ₹27 லட்சத்துக்கு பிரியாணி பில் – அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

சண்டிகரில் இருந்து டெல்லிக்கு 250 கிமீ தான் தொலைவு என்ற போதிலும் தனி விமானத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பயணம் செய்திருப்பதை எதிர்கட்சிகள் கண்டித்துள்ளன.



இந்த விவகாரம் தொடர்பாக ஷிரோமணி அகாலி தளம் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் காங்கிரஸ் கட்சிடை விமர்சித்து வெளியிட்டுள்ள பதிவில், “சாதாரண மனிதனுக்கு துணை இருப்பதாக கூறிய காங்கிரஸ் தலைவர்கள் சண்டிகரில் இருந்து டெல்லிக்கு 250 கிமீ தூர பயணத்துக்காக தனி விமானத்தில் சென்றுள்ளனர். உங்களால் காரில் அல்லது சாதாரண பயணியர் விமானத்தில் செல்ல முடியாதா? அல்லது காந்தி குடும்பத்தின் டெல்லி தர்பார் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறீர்களா?” என கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Also Read:   ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரம்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏவும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ஹர்பல் சிங் சீமா கூறுகையில், “வெறும் வார்த்தையை கூறிவிடுவதால் யாரும் சாதாரண மனிதன் ஆகிவிடுவதில்லை. இவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இந்த விமானத்துக்கான செலவுத் தொகையை பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து செலுத்தினார்களா அல்லது காங்கிரஸ் கட்சியின் கணக்கில் இருந்து செலுத்தினார்களா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கின் ஆலோசகர் ரவீன் துக்ரல் கூறுகையில், “5 பேர் செல்லக்கூடிய அரசு ஹெலிகாப்டர் இருக்கும்போது, 16 பேர் செல்லக்கூடிய தனி விமானத்தில் செல்கிறார்கள்” என அவர் விமர்சித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: