• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு! ப.சிதம்பரத்தின் மீது குற்றப் பத்திரிக்கைத் தாக்கல்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு! ப.சிதம்பரத்தின் மீது குற்றப் பத்திரிக்கைத் தாக்கல்

இந்த வழக்கில் சிபிஐயால் ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோர்கள் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சிபிஐயால் ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தற்போது, ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர், ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரணை செய்துவருகின்றனர். இந்தநிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: