சிறையில் சொகுசு வாழ்க்கை: சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

சசிகலா

சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு பெங்களூரு உயர் நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

 • Share this:
  லஞ்சம் கொடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதி பெற்ற வழக்கில் சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலிசார் தாக்கல் செய்தனர்.

  சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி,  சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம்   அடைக்கப்பட்டனர்.  சிறையில் இருந்தபோது  சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வசதி பெற்றதாக குற்றச் சாட்டு எழுந்தது.   அப்போதை கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.  சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க அப்போதைய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  கிருஷ்ணகுமார் தற்போது பெலகாவி இண்டல்கா மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் கிருஷ்ணகுமாரின் வீட்டில் ஏசிபி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

  இதையும் படிங்க: மத்திய அமைச்சர் கைது செய்யப்பட்டது நியாயமானதுதான் - மாவட்ட நீதிபதி உறுதி


  இந்நிலையில், பல வருடங்கள் ஆகியும் சசிகலாவுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க சென்னையைச் சேர்ந்த கீதா என்ற சமூக ஆர்வலர் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருந்தார்.

  கடந்த 11ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாத காரணத்தினால் நீதிபதி கண்டிப்புடன்,  விசாரித்தவரை உள்ள தகவல்களை 25ஆம் தேதி (இன்று) குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார். அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் சீல் செய்யப்பட்ட உறையில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு சசிகலாவிற்கு எதிரான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

  மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி பயணம்

  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு இந்த வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவின்படி இறுதியாக சசிகலாவிற்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Murugesh M
  First published: