India Toy Fair 2021: சூடுபிடிக்கும் தனித்துவமான சென்னப்பட்டணா பொம்மைகள் விற்பனை!

India Toy Fair 2021: சூடுபிடிக்கும் தனித்துவமான சென்னப்பட்டணா பொம்மைகள் விற்பனை!

Toy fair

கொரோனா பொதுமுடக்கத்தால் நலிந்திருந்த உலகப்புகழ்பெற்ற சென்னப்பட்டணா பொம்மைகள் விற்பனை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

  • Share this:
    கொரோனா பொதுமுடக்கத்தால் நலிந்திருந்த உலகப் புகழ்பெற்ற சென்னப்பட்டணா பொம்மைகள் விற்பனை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சென்னப்பட்டணா என்ற இடம், பொம்மைகள் உற்பத்திக்கு பெயர்பெற்றது. இங்கு மர கட்டைகளில் செய்யப்படும் பொம்மைகளை தயாரிக்கும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மைசூருக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் ஒருமுறையாவது இந்த பொம்மைகளை வாங்கிச்செல்வர். சீன பொம்மைகளுக்கு சவால் விடும் வகையில் இதன் நுட்பமான கலை வேலைபாடுகள் அமைந்திருக்கும். சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வண்ணப்பூச்சு, தனித்துவமான வடிவமைப்பு இந்த பொம்மைகளின் சிறப்பம்சமாகும்,

    கொரோனா ஊரடங்கால் சுற்றுலாபயணிகள் வருகையின்றி இவர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. வாழ்வாதாரம் இழந்து தவித்த உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு இந்தாண்டில் இருந்து ஆன்லைன் மூலம் பொம்மைகள் கண்காட்சியை நடத்துகிறது. மேலும் இவ்வகை பொம்மைகளை ரயில்நிலையங்களில் விற்கவும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



     

    இது தொடர்பாக பொம்மை உற்பத்தியாளர்கள் பேசும்போது, ``சென்னபட்டிணா பொம்மை உற்பத்தியாளர்களை பிரதமர் மோடி அங்கீகரித்துள்ளார். ரயில்நிலையங்களில் இவ்வகை பொம்மை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுக்க விற்பனை செய்ய முடியும், இதனால் கலைஞர்கள் பயன்பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.

    சனிக்கிழமை தொடங்கும் ஆன்லைன் பொம்மை கண்காட்சி வரும் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. www.theindiatoyfair.in என்ற இணையத்தில் பொதுமக்கள் பொம்மைகளை பார்வையிடவும் வாங்கவும் முடியும்.
    Published by:Ram Sankar
    First published: