சந்திராயன் 2 விண்கலம் ஜுலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ

news18
Updated: July 18, 2019, 11:17 AM IST
சந்திராயன் 2 விண்கலம் ஜுலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ
சந்திரயான் 2
news18
Updated: July 18, 2019, 11:17 AM IST
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா தயாரித்த சந்திராயன் 2 விண்கலம் வரும் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பிற்கு அடியில், நிலவின் வெளிப்புறத்தில் தண்ணீர் மூலக்கூறுகளின் விநியோக அளவு ஆகியவற்றை கண்டறிய மேலதிக ஆய்வுகளை செய்வதற்காக சந்திரயான்-2 திட்டம் உருவாக்கப்பட்டது.

இதற்கான 20 மணி நேர கவுன்ட்டவுண் கடந்த 14-ம் தேதி காலை 6.51 மணிக்கு தொடங்கியது. இதை தொடர்ந்து 15-ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட இருந்தது.


இஸ்ரோவின் பாகுபலி என விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் சந்திரயான்-2 செயற்கைக்கோளை சுமந்து செல்ல இருந்தது.

இந்நிலையில், விண்கலம் விண்ணில் ஏவப்பட 56 நிமிடங்கள் இருந்த போது சந்திரயான் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். விண்கலம் ஏவும் லான்ச்பேட் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சந்திரயான் மறுபடியும் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், சந்திராயன் 2 விண்கலம் மீண்டும் வரும் 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

Loading...


First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...