பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே சந்திரயானை பெரிதுபடுத்துகிறது பாஜக அரசு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே சந்திரயானை பெரிதுபடுத்துகிறது பாஜக அரசு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மம்தா பானர்ஜி
  • Share this:
பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே சந்திரயான் விண்ணில் ஏவப்பட்ட விவகாரத்தை பாஜக அரசு பெரிதுப்படுத்துவதாக மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சந்திரயான் விண்கலம் இப்போது தான் முதல்முறையாக ஏவப்படுவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது என்றார்.

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதுபோன்ற விண்வெளி சார்ந்த சாதனைகள் நாட்டில் நிகழ்ந்ததே இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க பாஜக அரசு முயற்சி மேற்கொள்வதாகவும் மம்தா குற்றஞ்சாட்டினார்.


மேலும், இது போன்ற செயல்கள் நாட்டில் நிலவும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை மறைப்பதற்காகவே செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

Watch Also:
First published: September 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...