20 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது! விண்ணில் பாய காத்திருக்கும் சந்திரயான்-2

சந்திராயன் 2 விண்கலம், கவுண்டவுன் முடிய 56 நிமிடங்கள் இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது

news18
Updated: July 21, 2019, 9:19 PM IST
20 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது! விண்ணில் பாய காத்திருக்கும் சந்திரயான்-2
சந்திராயன் 2 விண்கலம், கவுண்டவுன் முடிய 56 நிமிடங்கள் இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது
news18
Updated: July 21, 2019, 9:19 PM IST
சந்திராயன்-2 விண்கலனை மீண்டும் ஏவுவதற்கான கவுண்டவுன் இன்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. நாளை மதியம் 2.43 மணிக்குக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

`சந்திராயன் - 2’ உலகமே உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் விண்கலம். நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வுசெய்ய இந்திய விஞ்ஞானிகள் இந்த விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை எந்த நாடும் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பியதில்லை என்பதால், மற்ற நாடுகளின் கவனம் சந்திராயன் -2 மீது உள்ளது. 2008-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதை முதன்முதலாக உறுதிசெய்தது.ஜூலை 15-ம் தேதி, ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து GSLV MK III ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாராக இருந்த சந்திராயன் 2 விண்கலம், கவுண்டவுன் முடிய 56 நிமிடங்கள் இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது, அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில், நாளை சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படவுள்ளது. அதற்கான கவுண்டவுன் இன்று மாலை 6.43 மணிக்குத் தொடங்கியது. நாளை, மதியம் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணிற்கு பாயும் வகையில் கவுன்டவுன் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ‘ராக்கெட்டில் ஏற்பட்டக் கோளாறு முற்றிலும் சரிசெய்யப்பட்டுள்ளது. சந்திராயன்-2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

Also see:

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...