நிலவின் தென் துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்ய இந்தியா அனுப்பும் சந்திரயான் 2 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய அனுப்பியது.
அத்திட்டம் வெற்றி பெற்றதையடுத்து நிலவில் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.
அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-ம் தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.
ஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதால் 22-ந்தேதி (நாளை) மதியம் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.
இதையடுத்து, ராக்கெட் ஏவுவதற்கான 20 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை தொடங்கியது.
சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று தெரிவித்திருந்தார்.
இன்று, பிற்பகல் 2.40 மணிக்கு செயற்கைக்கோள் ஏவப்படுவதை ஒட்டி, பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 2 செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
#BREAKING
நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது சந்திரயான் - 2 #Chandrayaan2
LIVE UPDATES : https://t.co/rC8V2h42Mg pic.twitter.com/n7OTCHW77K
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 22, 2019
978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 2 செயற்கைக்கோள், 2 மாதங்களில் நிலவை சென்றடையும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: About chandrayaan 2, Chandrayaan, Chandrayaan 2, Chandrayaan 2 date, Chandrayaan 2 in tamil, Chandrayaan 2 isro, Chandrayaan 2 lander name, Chandrayaan 2 launch date, Chandrayaan 2 launch time, Chandrayaan 2 live launch, Chandrayaan 2 mission, Chandrayaan 2 news, Chandrayaan 2 photos, Chandrayaan 2 tamil news, Chandrayaan 2 video, India chandrayaan 2, ISRO, Isro chandrayaan 2, Isro chandrayaan 2 launch, Isro launch, Lander chandrayaan 2, Live chandrayaan 2, Name of chandrayaan 2, What is chandrayaan 2