புவிவட்டப் பாதையில் இருந்து நிலவை நோக்கிப் புறப்பட்டது சந்திரயான்-2!

20-ம் தேதி அன்று சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புவிவட்டப் பாதையில் இருந்து நிலவை நோக்கிப் புறப்பட்டது சந்திரயான்-2!
20-ம் தேதி அன்று சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
  • News18
  • Last Updated: August 14, 2019, 9:35 AM IST
  • Share this:
சந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்-2 விண்கலம், புவி வட்டப்பாதையிலிருந்து சந்திரனின் வட்டப்பாதையை நோக்கி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம், விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் 5 முறை உயர்த்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புவிவட்டப் பாதையிலிருந்து சந்திரனின் வட்டப்பாதையை நோக்கி விண்கலத்தை செலுத்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மேற்கொண்டனர்.


இதற்காக இன்று அதிகாலை 2.21 மணிக்கு விண்கலத்தில் உள்ள திரவ என்ஜின் இயக்கப்பட்டது. 12 விநாடிகள் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்திரனை நோக்கிச் செல்லும் பாதைக்கு விண்கலம் சென்றது.

சந்திரனுக்கு அருகே 20-ம் தேதி விண்கலம் சென்றடையும் என்றும் அதனைத் தொடர்ந்து, சந்திரனின் வட்டப் பாதைக்கு செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரனில் அடுத்த மாதம் 7-ம் தேதி சந்திரயான்-2 தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... வைகோவின் குரல் ஸ்டாலினுடையதா? கராத்தே தியாகராஜன்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்