ஹோம் /நியூஸ் /இந்தியா /

சந்திரயான்-2: விஞ்ஞானிகளை வாழ்த்திய குடியரசுத்தலைவர், பிரதமர்!

சந்திரயான்-2: விஞ்ஞானிகளை வாழ்த்திய குடியரசுத்தலைவர், பிரதமர்!

விண்ணில் பாய்ந்த ராக்கெட்

விண்ணில் பாய்ந்த ராக்கெட்

நிலவில் செப்டம்பர் மாதத்தில் சந்திராயன்-2 தரையிறங்குவது, நிலவில் மனிதன் தரையிறங்குவதற்கு முன்னோட்டமாக அமையும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சந்திரயான்-2 விண்வெளிக்கு செலுத்தப்பட்டது அனைத்து இந்தியர்களும் பெருமைப்படக் கூடிய தருணம் என்று தெரிவித்துள்ளார்.

ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் நடவடிக்கைகளை தனது அலுவலகத்திலிருந்தபடி தொலைக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

இதையடுத்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், இது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக் கூடிய தருணம் என்றும், சந்திரயான்-2 விண்கலம் போன்ற முயற்சிகள், நமது இளைஞர்களை அறிவியல், உயர்தர ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதேபோல, விஞ்ஞானிகளுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளன.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக மக்களின் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் விண்வெளி துறையில் இஸ்ரோ வரலாற்று சாதனை புரிந்துந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், நிலவில் செப்டம்பர் மாதத்தில் சந்திராயன்-2 தரையிறங்குவது, நிலவில் மனிதன் தரையிறங்குவதற்கு முன்னோட்டமாக அமையும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை

மேலும், வர்த்தக ரீதியாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க...  சந்திரயான் 2 நிலவில் என்ன செய்யும்?


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: About chandrayaan 2, Chandrayaan, Chandrayaan 2, Chandrayaan 2 date, Chandrayaan 2 in tamil, Chandrayaan 2 isro, Chandrayaan 2 lander name, Chandrayaan 2 launch date, Chandrayaan 2 launch time, Chandrayaan 2 live launch, Chandrayaan 2 mission, Chandrayaan 2 news, Chandrayaan 2 photos, Chandrayaan 2 tamil news, Chandrayaan 2 video, India chandrayaan 2, ISRO, Isro chandrayaan 2, Isro chandrayaan 2 launch, Isro launch, Lander chandrayaan 2, Live chandrayaan 2, Name of chandrayaan 2, What is chandrayaan 2