ஜூலையில் விண்ணில் பாய்கிறது சந்திராயன் - 2 விண்கலம்...!

உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில், பல்வேறு ஆய்வு முடிவுகளை சந்திரயான் விண்கலம் அளிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Web Desk | news18
Updated: June 13, 2019, 10:59 AM IST
ஜூலையில் விண்ணில் பாய்கிறது சந்திராயன் - 2 விண்கலம்...!
உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில், பல்வேறு ஆய்வு முடிவுகளை சந்திரயான் விண்கலம் அளிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Web Desk | news18
Updated: June 13, 2019, 10:59 AM IST
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம், அடுத்த மாதம் 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது நிலவில் செப்டம்பர் மாதம் 6 அல்லது 7-ம் தேதியில் தரையிறங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிலவில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இஸ்ரோ செலுத்தியது. 312 நாட்கள் செயல்பாட்டில் இருந்த இந்த விண்கலம், நிலவின் மேல் பகுதியில் உள்ள தாதுக்கள் குறித்து ஆய்வுசெய்தது. இதேபோல, நிலவில் நீர்த்துளிகள் இருப்பதையும் கண்டுபிடித்தது.

இதனைத் தொடர்ந்து, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அடுத்த மாதம் 15-ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விண்கலம் நிலவில் செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தரையிறங்கும் என்று கூறினார். சந்திரயான்-1 விண்கலத்தை விட சந்திரயான்-2 விண்கலம் மிகவும் சிக்கலானது என்று அவர் கூறினார்.

இந்தியாவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க்-3 மூலம், சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட உள்ளது. விண்கலத்தில் வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் கருவி, விக்ரம் என்று பெயரிடப்பட்ட தரையிறங்கும் கருவி, பிரக்யான் என்று பெயரிடப்பட்ட நிலவின் மேல் பகுதியில் வலம்வரும் கருவி ஆகியவை இடம்பெறும்.

3.8 டன் எடைகொண்ட விண்கலத்தை தயாரிக்க 603 கோடி ரூபாய் செலவுபிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதேபோல, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை தயாரிக்க 375 கோடி ரூபாய் செலவுபிடித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டதும், புவிவட்டபாதை வரை விண்கலத்தை மார்க் 3 ராக்கெட் எடுத்துச் செல்லும். இதனைத் தொடர்ந்து, உந்துவிசை சக்தி மூலம், நிலவின் வட்டப்பாதைக்கு விண்கலம் சென்றுசேரும்.

நிலவின் வட்டப்பாதையிலிருந்து லேண்டர் கருவி பிரிந்து சென்று, ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும். இதன்மூலம், நிலவில் இதுவரை யாரும் சென்றடையாத நிலவின் தென்துருவத்தில் இஸ்ரோ ஆய்வு மேற்கொள்ள உள்ளது. ஆர்பிட்டர் கருவி, நிலவின் வட்டப்பாதையிலேயே சுற்றிவரும். மேலும், லேண்டரிலிருந்து பிரிந்துசெல்லும் ரோவர் கருவி, நிலவின் தரைப்பகுதியில் நகர்ந்து சென்று, ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.

ரோவர் கருவி தெரிவிக்கும் தகவல்கள், ஆர்பிட்டர் மூலமாக பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று சேர்க்கப்படும். இதேபோல, ஆர்பிட்டர், லேண்டர் கருவிகளிலும் நிலவின் தாதுக்கள் குறித்த ஆராய்ச்சிக்காக உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சூரிய சக்தியில் இயங்கும் லேண்டரின் ஆயுட்காலம் 14 புவி நாட்கள் அல்லது ஒரு நிலவு நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவில் ஏற்படும் அதிர்வுகள் குறித்தும் லேண்டர் ஆய்வு செய்யும். நிலவில் உள்ள தாதுப்பொருட்களை ஆய்வுசெய்யவும், மேல் பகுதியில் உள்ள வரைபடத்தை படம்பிடிக்கவும், நீரின் இருப்பு குறித்து ஆராயவும் சந்திரயான் விண்கலத்தில் 13 கருவிகள் சேர்க்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன்


இதேபோல, நாசாவின் லேசர் கருவியை எந்தவொரு கட்டணமும் இன்றி, சந்திரயான் மூலம் இஸ்ரோ அனுப்பிவைக்க உள்ளதாக சிவன் கூறினார். உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில், பல்வேறு ஆய்வு முடிவுகளை சந்திரயான் விண்கலம் அளிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Also see... பாதை மாறி போனவர்கள் திரும்பி வந்தால் உரிய மரியாதை கிடைக்கும்

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...