’30-நிமிடங்கள் இதயம் இயங்கவில்லை’! சந்திரயான்-2 நிலவு வட்டப்பாதையை எட்டிய தருணம் பற்றி சிவன் நெகிழ்ச்சி

திட்டமிட்டபடி, 902 மணி நேரத்தில் விண்கலம் நிலவு வட்டப்பாதையை எட்டியுள்ளது. இது வெறும் தொடக்கம்தான், செப்டம்பர் 7-ம் தேதிதான் இக்கட்டான தருணம் உள்ளது.

’30-நிமிடங்கள் இதயம் இயங்கவில்லை’! சந்திரயான்-2 நிலவு வட்டப்பாதையை எட்டிய தருணம் பற்றி சிவன் நெகிழ்ச்சி
இஸ்ரோ தலைவர் சிவன்
  • News18
  • Last Updated: September 6, 2019, 6:25 PM IST
  • Share this:
சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான்-2 நிலை நிறுத்தப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி வட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த இந்த விண்கலம் படிப்படியாக 5 முறை நிலை உயர்த்தப்பட்டது. இன்று, சந்திரயான்-2 வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ‘விண்கலத்தை புவி வட்டப்பாதையிலிருந்து நிலவு வட்டப்பாதைக்கு செலுத்துவதற்காக திரவ இயந்திரத்தை விஞ்ஞானிகள் இயக்கினர். அப்போது எங்களது இதயத்துடிப்பு அதிகரித்தது. சுமார், 30 நிமிடங்கள் எங்களது இதயம் இயங்கவில்லை. திட்டமிட்டபடி, 902 மணி நேரத்தில் விண்கலம் நிலவு வட்டப்பாதையை எட்டியுள்ளது. இது வெறும் தொடக்கம்தான், செப்டம்பர் 7-ம் தேதிதான் இக்கட்டான தருணம் உள்ளது.


ஏனென்றால், அந்த விஷயத்தை இஸ்ரோ இதுவரையில் செய்தது கிடையாது. தற்போது, பதற்றம் அதிகரிக்கத்தான் செய்துள்ளது. குறையவில்லை. புவி வட்டப்பாதையிலிருந்து 1,738 விநாடிகளில் நிலவு வட்டப்பாதையை சந்திரயான்-2 அடைந்துள்ளது’ என்று தெரிவித்தார். சந்திரயான்-2 வெற்றிகரமாக நிலவு வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Also see:

First published: August 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading