முகப்பு /செய்தி /இந்தியா / இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் சந்திரசேகர ராவ்..!

இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் சந்திரசேகர ராவ்..!

முதலமைச்சராக பதவியேற்கும் சந்திரசேகர ராவ்

முதலமைச்சராக பதவியேற்கும் சந்திரசேகர ராவ்

டி.ஆர்.எஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் சட்டமன்ற கட்சித் தலைவராக சந்திரசேகர ராவ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

  • Last Updated :

தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக சந்திரசேகர ராவ் பதவியேற்றுக் கொண்டார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்திஸ்கர், மேகலாயா ஆகிய மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 11-ம் தேதி வெளிவந்தது. அதில், தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் ஆளும் ராஷ்டிரிய சமிதிக் கட்சி மாபெறும் வெற்றி பெற்றது. அதனையடுத்து, இரண்டாவது முறையாக சந்திர சேகர ராவ் முதலமைச்சராவது உறுதியானது.

காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதனையடுத்து, மீண்டும் புதிய ஆட்சியமைக்கும் பணிகளை தெலங்கானா ராஷ்டிர சமிதி தொடங்கியது.

அதன்படி, டி.ஆர்.எஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் சட்டமன்ற கட்சித் தலைவராக சந்திரசேகர ராவ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனையடுத்து, இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள்நடைபெற்றன. இன்று பிற்பகல் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தெலங்கானா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக சந்திரசேகராவ் பதவியேற்றார். தெலங்கானா ஆளுநர் நரசிம்மன், பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

Also see:

top videos

    First published:

    Tags: Chandrasekar rao, Telangana