ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சியாக தெலங்குதேசம் கட்சி உள்ளது. 2024ஆம் நாடாளுமன்ற தேர்தலுடன் அங்கு சட்டமன்ற பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளது. எனவே, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருகிறார்.
இந்த தேர்தல் தான் தனது கடைசி தேர்தல் எனவும், இதில் தோல்வி அடைந்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என பகீரங்கமாக அறிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில், ஆளும் கட்சியை குறிவைத்து 'நமது மாநிலத்திற்கு ஏன் இப்படிப்பட்ட தலை எழுத்து' என்ற பெயரில் அவர் மாநிலம் தழுவிய பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். நேற்று குண்டூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிலையில், அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சில நாள்களுக்கு முன்னர் நெல்லூரில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் சிக்கி பெண் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்த வேலைவாய்ப்பின்மை - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்த பொதுக்கூட்டத்தின் போது, சமையல் எண்ணெய், அரிசி போன்ற பொருள்களை தெலுங்குதேசம் கட்சியினர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகவும் அதை பெற மக்கள் முந்தியடித்து சென்றதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில காவல்துறையின் மோசமான நிர்வாகமே இது போன்ற விபத்துக்கு காரணம் இதற்கு ஜெகன் அரசு தான் பொறுப்பு என இது குறித்து சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, பப்ளிட்டி தேடுவதற்காக தெலுங்கு தேசம் கட்சி வேண்டும் என்றே இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குவதாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சாடியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Chandrababu naidu