பாஜக-வுக்கு எதிரான கூட்டணி அமைக்க சந்திரபாபுநாயுடு முயற்சி!

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட எந்தக் கட்சியையும் தங்களது அணிக்கு வரவேற்பதாக ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட எந்தக் கட்சியையும் தங்களது அணிக்கு வரவேற்பதாக ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாஜக-வுக்கு எதிரான கூட்டணியில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட எந்தக் கட்சியும் இணையலாம் என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், 23-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பாஜக-வுக்கு எதிரான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்குதேசம் கட்சி தலைவரும், ஆந்திரப்பிரதேச முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியிலும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை லக்னோவிலும் இன்று சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட எந்தக் கட்சியையும் தங்களது அணிக்கு வரவேற்பதாகக் கூறினார். தனியாக கூட்டணி அமைக்க தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், சந்திரபாபு நாயுடு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

Also see... தொடர் வன்முறை... மேற்கு வங்கத்தில் பிரசாரத்திற்கு தடை

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: