மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் சந்திரபாபு உண்ணாவிரதம்- ராகுல் ஆதரவு!

மத்தியில் ஆளும்கட்சி இக்கோரிக்கையைக் கண்டுகொள்ளாததால் கடந்த ஆண்டு ஆளும் தேசிய ஜனநாயக்க் கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது.

Web Desk | news18
Updated: February 11, 2019, 11:13 AM IST
மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் சந்திரபாபு உண்ணாவிரதம்- ராகுல் ஆதரவு!
சந்திரபாபு நாயுடு
Web Desk | news18
Updated: February 11, 2019, 11:13 AM IST
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வரும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளார்.

மத்திய அரசிடம் தொடர்ந்து ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்து வருகிறார். ஆனால், மத்தியில் ஆளும்கட்சி இக்கோரிக்கையைக் கண்டுகொள்ளாததால் கடந்த ஆண்டு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநில எம்.பி.-க்கள் போராடியும் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து மத்திய அரசு ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என டெல்லியில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தை சந்திரபாபு தொடங்கி உள்ளார். இன்று இரவு 8 மணி வரை தொடர உள்ள இப்போராட்டம் டெல்லியின் ஆந்திர பவன் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

சந்திரபாபுவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதரவு தெரிவித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ஆந்திர மக்களுக்கு எப்போதும்  ஆதரவாக இருப்பேன். மோடி நாட்டுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை” என்று தெரிவித்தார்.  தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ப்ரூக் அப்துல்லா, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்திர பாபு நாயுடுவைச் சந்தித்து ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: கூட்டணிக்காக அதிமுகவை மிரட்டும் பாஜக... ஸ்டாலின் பகீரங்க குற்றச்சாட்டு
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...