50 % ஒப்புகைச் சீட்டை சரிபார்க்க வேண்டும்: எதிர்கட்சிகள் ஒருமித்த கோரிக்கை

டெல்லியில் எதிர் கட்சித் தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஒன்று சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

news18
Updated: April 14, 2019, 6:19 PM IST
50 % ஒப்புகைச் சீட்டை சரிபார்க்க வேண்டும்: எதிர்கட்சிகள் ஒருமித்த கோரிக்கை
மாதிரிப் படம்
news18
Updated: April 14, 2019, 6:19 PM IST
வாக்கு எண்ணிக்கையின்போது ஐம்பது சதவீத வாக்கு பதிவுக்கான ஒப்புகைச் சீட்டையும் எண்ண வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கைவைத்துள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்றது. ஆந்திரப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

வாக்குப்பதிவு நடைபெற்றதிலிருந்தே சந்திரபாபு நாயுடு, வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதும், தேர்தல் ஆணையம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். இன்று, டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஒன்று சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, ‘ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற முன்னேறிய நாடுகளில் கூட இன்னமும் வாக்குச் சீட்டு முறைதான் அமலில் உள்ளது. ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு என்பது வாக்கு இயந்திரத்தில் மிகவும் முக்கியமானது. ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கப்படும்போதுதான், வாக்காளர்களுக்கு நம்பிக்கைவரும்.

50% வாக்கு ஒப்புகைச் சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்’ என்று தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, ‘லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் எந்த சோதனையும் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து, கட்சிகள் சார்பில் நீண்ட பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

50% ஒப்புகைச் சீட்டை எண்ண வேண்டியது அவசியமான ஒன்று. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம். முதல்கட்டத் தேர்தல் முடிந்த பிறகு இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டோம். ஆனால், இதுதொடர்பாக அவர்கள் உரிய கவனம் செலுத்தியதுபோல தெரியவில்லை. நீங்கள் ஒரு கட்சிக்கு வாக்கு செலுத்தினால், அது மற்றொரு கட்சிக்கு வாக்குப் பதிவாகிறது. ஏழு விநாடிகள் தெரிய வேண்டிய வாக்கு இயந்திரத்தில் மூன்று விநாடிகள்தான் தெரிகிறது’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...