• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதிய தலைமை செயலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

புதிய தலைமை செயலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலம் அமராவதியில் 49 ஏக்கரில் 5 டவர்களுடன் புதிய தலைமைச் செயலகம் கட்டபட உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திர மாநிலம் அமராவதியில் புதிய தலைமை செயலகத்தின் கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.

ஆந்திர மாநிலம் அமராவதியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான பணிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பூமி பூஜை செய்து வைத்தார். நாட்டிலேயே முதல்முறையாக தூண்கள் இல்லாமல் அதிநவீன தொழில் நுட்ப வசதிகளுடன் 49 ஏக்கரில் 5 டவர்களுடன் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுகிறது.

ஆந்திராவில் தலைமை செயலகம் கட்ட பூமி பூஜை செய்த சந்திரபாபு நாயுடு


இதில், 4 டவர்கள் 40 மாடிகளைக் கொண்டதாகவும், ஒரு டவர் 50 மாடிகளை கொண்ட கட்டடமாகவும் இருக்கும். மேலும் இந்த கட்டடத்தில் ஒரே நேரத்தில் 4, 000 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

தலைமை செயலகம் கட்ட நடிக்கல் நாட்டும் சந்திரபாபு நாயுடு


மேலும் இதற்கான அடிதளம் அமைக்க  தொடர்ந்து 72 மணி நேரமாக கான்க்ரீட் போடும் பணி நடைபெற்று வருகிறது. 3 நாட்களில் முடிக்கும் விதமாக இந்தப் பணியை சந்திரபாபு நாயுடு சிமெண்ட் கலவையை செலுத்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

Also see... லேட்டாக வந்த மாணவர்களை நிர்வாணப்படுத்திய பள்ளி நிர்வாகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: