• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மோடி ஒரு சிறந்த நடிகர்: சந்திரபாபு நாயுடு

மோடி ஒரு சிறந்த நடிகர்: சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடு.

தன் குருவைக் கூட மதிக்காதவர் மோடி என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடியை விட சிறந்த நடிகர் யாரும் இருக்க முடியாது எனஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 

அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடிக்கு யாராவது வணக்கம் சொன்னால் பதில் வணக்கம் கூட சொல்லாதவர் என்றும், அரசியலில் தன் குருவான அத்வானியைக் கூட அவர் மதித்ததில்லை என்றும் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் துப்புரவு தொழிலாளிகளின் பாதங்களை கழுவும் மோடி, கடந்த நான்கு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் "ஆந்திராவை ஒரு '' பிமாரின் '' மாநிலமாக மாற்றுவதற்கான சதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஜாதி அரசியலை பாஜக செய்து வருகிறது என்றும் கூறினார். கடந்த 40 ஆண்டு கால தனது  அரசியல் வாழ்க்கையில் சாதியை முத்திரையாக பயன்படுத்தியது இல்லை என்று  சந்திரபாபு நாயுடு கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர்,  பாஜக , மக்கள் நம்பிக்கை கொள்ளாத கற்பனையான பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக  குற்றம்சாட்டியுள்ளார்.

Also see...  அதிமுக ஊழல் கட்சியா? பதிலளிக்க மறுத்த அன்புமணி 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: