ஜெகன் மோகன் பற்றி போலி புகைப்படத்தை பதிவு செய்த சந்திரபாபு நாயுடு! வறுத்தெடுத்த நெட்டீசன்கள்

2015-ம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தை தற்போது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

news18
Updated: August 11, 2019, 4:26 PM IST
ஜெகன் மோகன் பற்றி போலி புகைப்படத்தை பதிவு செய்த சந்திரபாபு நாயுடு! வறுத்தெடுத்த நெட்டீசன்கள்
சந்திரபாபு நாயுடு
news18
Updated: August 11, 2019, 4:26 PM IST
ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்த போலியான புகைப்படத்தை ட்விட்டரில் ஷேர் செய்த சந்திரபாபு நாயுடுவை நெட்டிசன் வறுத்தெடுத்தனர்.

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையில் கடும் மோதல் போக்கு நிலவிவருகிறது. சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் சிலவற்றை இடிப்பதற்கு உத்தரவிட்டார் ஜெகன்மோகன் ரெட்டி. இந்தநிலையில் கடந்த 8-ம் தேதி சந்திரபாபு நாயுடு, இரண்டு புகைப்படத்தை பதிவிட்டு ஒரு ட்விட் ஒன்றை பதிவிட்டார்.

அந்த புகைப்படத்தின் கீழ், சமூக நல இயக்கத்தின் ஊழியர், ஜெகன் மோகன் ரெட்டியை பாலால் குளிப்பாட்டுகிறார். மற்றொரு, அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் தொடர்பானது. இந்தப் புகைப்பட்டத்தின் கீழ், ‘ஒருவருடைய வாக்குறுதி பொய்க்கும்போது இதுதான் நடைபெறுகிது’ என்று பதிவிட்டிருந்தார். சமூக நல இயக்கத்தின் பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ரூபாய் ஊதியம் வழங்குவோம் என்று ஜெகன்மோகன் அளித்த வாக்குறுதியை குறிப்பிட்டு அவ்வாறு பதிவிட்டிருந்தார்.

ஆனால், அந்தப் புகைப்படங்கள் போலியானது. 2015-ம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தை தற்போது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதனால், நெட்டீசன்கள் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக ட்ரோல் செய்தனர். அதனையடுத்து அந்த ட்வீட்டை சந்திரபாபு நாயுடு நீக்கினார்.

இதுகுறித்து தெரிவித்த ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அம்பதி ராம்பாபு, ‘சமூக நல இயக்கத்தின் பணியாளர்களுக்கு ஏற்கெனவே ஊதியம் உயர்த்தப்பட்டுவிட்டது. தேர்தலில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி பால் கொடுக்கும் கறவை மாடாக இருந்ததா அல்லது மக்களின் ரத்தத்தை உறியும் அட்டைப் பூச்சியா இருந்ததா என்று தெரியப்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...