ஹோம் /நியூஸ் /இந்தியா /

வாடகைக்கு வீடு தேடும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு!

வாடகைக்கு வீடு தேடும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு!

சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

ஜெகன் மோகன் ரெட்டி அரசு நேற்று இரவு பிரஜா வேதிகா ஷெட்டை பிரித்து அப்புறப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் வாடகைக்கு வீடு தேடி வருகிறார். 

ஆந்திர தலைநகர் அமராவதி அருகே உள்ள உண்டவல்லி என்ற பகுதியில் ஆந்திர அரசு வாடகைக்கு எடுத்து இருந்த வீட்டில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

அவர் தங்கியிருந்த வீட்டின் அருகே காலியாக இருந்த இடத்தில் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் உள்ளிட்டோரை சந்திப்பதற்கு வசதியாக எட்டு கோடி ரூபாய் செலவில் பிரஜா வேதிகா என்ற பெயரில் ஷெட் ஒன்றை ஆந்திர அரசு அமைத்தது.

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர்,பிரஜா வேதிகா ஷெட்டை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ள அனுமதி கோரி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதினார்.

ஆனால் பிரஜா வேதிகா ஷெட் பொது இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக பிரஜா வேதிகா ஷெட் டை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு  ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு பிரஜா வேதிகா ஷெட்டை பிரித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரஜா வேதிகா ஷெட் போடப்பட்டிருந்த பகுதியில் இருக்கும் சாலையையும் இடிக்க உத்தரவிடப்பட்டது.

இது தவிர சந்திரபாபு நாயுடு வசித்துவரும் வீடு கிருஷ்ணா நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி அரசின் இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் வாடகைக்கு வீடு தேட தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலூம் படிக்க... இந்தியாவிலேயே முதல் முறையாக ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்!


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Andhra Pradesh, Chandrababu naidu