• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கதறி அழுத சந்திரபாபு நாயுடு - சட்டமன்றத்தில் அவமானம் - சபதம் எடுத்து வெளிநடப்பு

கதறி அழுத சந்திரபாபு நாயுடு - சட்டமன்றத்தில் அவமானம் - சபதம் எடுத்து வெளிநடப்பு

Chandrababu naidu

Chandrababu naidu

மனைவி குறித்து எதிர்கட்சியினர் அசிங்கமாக பேசியதற்கு பதிலடி கொடுக்க முற்பட்ட போது சபாநாயகர் தனிமேனி சீதாராம் தனது மைக்கை ஆஃப் செய்துவிட்டதாக நாயுடு தெரிவித்தார்.

  • Share this:
ஆந்திர பிரதேச மாநில எதிர்கட்சித் தலைவரான சந்திர பாபு நாயுடு இன்று சட்டமன்றத்தில் கதறி அழுது அங்கிருந்து வெளியேறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, சட்டமன்ற கூட்டத்தொடரில் தன் மனைவி, குடும்பம் குறித்து ஆளும்கட்சியினர் அசிங்கமாக பேசிவிட்டதாக, செய்தியாளர் சந்திப்பில் கூறி கண் கலங்கி அழுதுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடம் தெலுங்கு தேசம் மோசமான தோல்வியை தழுவிய நிலையில் ஆட்சியை பறிகொடுத்தார் சந்திரபாபு நாயுடு. அதன் பின்னர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பம் நகராட்சிக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மோசமாக தோல்வியடைந்து முதல் தோல்வியை தெலுங்கு தேசம் பதிவு செய்திருந்தது.

Also read:   இதுவும் ஒரு ஜிகாதி தேசமே - வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்புக்கு நடிகை கங்கனா ரனாவத் அதிருப்தி

இதனிடையே ஆந்திர மாநில சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, என்  மனைவி, மற்றும் குடும்பத்தினர் குறித்து ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் அசிங்கமாக பேசிவிட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருக்கிறார். சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து எதிர்கட்சியினர் அசிங்கமாக பேசியதற்கு பதிலடி கொடுக்க முற்பட்ட போது சபாநாயகர் தனிமேனி சீதாராம் தனது மைக்கை ஆஃப் செய்துவிட்டதாக நாயுடு தெரிவித்தார்.

இதன் பின்னர் சட்டமன்றத்தில் இருந்து தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் வெளியேறிய சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆளும்கட்சி உறுப்பினர்களால் அவமானத்தை சந்தித்து வருகிறேன். இன்று அவர்கள் என் மனைவியையும் தவறாக பேசுகின்றனர். நான் எப்போதும் மரியாதையாக வாழ்ந்து வருபவன். இனிமேலும் என்னால் தாங்க முடியாது. இனி சட்டமன்றத்துக்கு செல்வதாக இருந்தால் வெற்றி பெற்று முதலமைச்சராக மட்டும் தான் செல்வேன்” இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Also read:  மது குடிப்பவர்கள் பொய் பேச மாட்டார்கள் - அரசு அதிகாரியின் பகீர் லாஜிக்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னதாக எதிர்கட்சித் தலைவராக இருந்த போது சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரால் அவமதிப்பை சந்தித்ததாகவும், எனவே இனி சட்டமன்றத்துக்கு வருவதாக இருந்தால் வெற்றி பெற்று முதல்வராகத் தான் வருவேன் என சபதம் எடுத்தது நினைவுகூறத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: