ஹோம் /நியூஸ் /இந்தியா /

முதல்வர் என்பதால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க முடியாது: நீதிமன்றம்

முதல்வர் என்பதால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க முடியாது: நீதிமன்றம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  முதலமைச்சர் என்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து சந்திரபாபு நாயுடுவுக்கு விலக்கு அளிக்க முடியாது என மகாராஷ்டிர மாநில நீதிபதி தெரிவித்துள்ளார்.

  மகாராஷ்டிர மாநிலம், நாந்தேடு மாவட்டம், பாப்லியில் உள்ள அணைக்கட்டை பார்வையிட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றார். அதனால் அவர் மீது தடையை மீறி சென்றது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காக மகாராஷ்டிரா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

  இதில் அவருடன் சென்ற  16 பேரும் மீதும் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகும் வகையில், ஜாமீனில்  வெளிவர இயலாத அளவுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கமலாஹர், ரத்தினம், பிரகாஷ் ஆகியோர் தர்மாபாத் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

  அதனைத் தொடர்ந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். எனினும் அதை ஏற்க மறுத்த நீதிபதி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், யாருக்கும் விதிவிலக்கு அளிக்க இயலாது என்றும் கூறினர். மேலும் மீதமுள்ள 12 பேரும் அடுத்த மாதம் 15-ம் தேதி ஆஜராகுவதற்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Andhra Pradesh, Chandrababu naidu, Maharashtra court, October 15, Popley