Puducherry: சந்திர பிரியங்கா: புதுச்சேரியில் 40 வருடங்களுக்கு பின் அமைச்சராகியிருக்கும் 2வது பெண்!

சந்திர பிரியங்கா

கடந்த 1980ம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைச்சரவையில் ரேணுகா அப்பாதுரை கல்வி அமைச்சராக இருந்தார்.

  • Share this:
புதுச்சேரி சட்டமன்ற வரலாற்றில் 40 வருடங்களுக்கு பின்னர் பெண் ஒருவர் அமைச்சராகியிருக்கிறார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். கூட்டணியில் அமைச்சர்கள் பங்கீடு, பாஜக அமைச்சர் மாற்றம், என்ஆர் காங்கிஸ் அமைச்சர்கள் தேர்வில் குழப்பம் என இழுபறி நீண்டு கொண்டே இருந்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அதாவது முதல்வர் மே7 ம் தேதி பதவி ஏற்றத்திற்கு பிறகு 50 நாட்களை கடந்த இன்று
அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

என்ஆர் காங்கிரசில் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார் மற்றும் சந்திரபிரியங்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இதில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு புதுச்சேரியில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழிசை


கடந்த 1980ம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைச்சரவையில் ரேணுகா அப்பாதுரை கல்வி அமைச்சராக இருந்தார். அவருக்கு பிறகு தற்போது காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா, ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராக பதவி ஏற்றார். இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார்.

Also Read:   புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு.. முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பெறும் பாஜக!

பதவி ஏற்று கொண்ட சந்திர பிரியங்கா, தனது தந்தை அமைச்சராக பணியாற்றிய அதே அறையில் இன்று அமர்ந்து பணியை துவங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
40 வருடங்களுக்கு பிறகு அமைச்சரவையில் பெண்ணுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

புதுச்சேரியில் 40 வருடங்களுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தனக்கு எந்த துறை ஒதுக்கினாலும் அதில் சிறப்பாக பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான உரிய பரதிநிதிதுவத்தை முதல்வர் ரங்கசாமி வழங்குவார் என்றும் அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.

Also Read:   தேசிய வில்வித்தை போட்டிக்கு தேர்வான வீரரின் மூக்கு, வாயை துண்டாக்கிய மர்ம நபர்! - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..

கொரோனா பரவல் காரணமாக இன்று நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.  அமைச்சர்களாக முதலில் பாஜகவைச் சேர்ந்த  நமச்சிவாயம் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து லட்சுமி நாராயணன்,தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் பதவி ஏற்றனர். துணை நிலை ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதுவை அமைச்சரவையில் முதல் முறையாக பாஜக இடம்பிடித்துள்ளது. அமைச்சர்கள் பதவியேற்பு விழா மேடைக்கு முதல்வர் ரங்கசாமி வருகை தந்த போது  வயதில் குறைந்த எம்எல்ஏக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவை திமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: