• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தெலுங்கு தேசம் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்- ஆந்திராவில் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்த சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்- ஆந்திராவில் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்த சந்திரபாபு நாயுடு

தாக்குதல் நடத்திய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார்

தாக்குதல் நடத்திய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு அழைப்புவிடுத்துள்ளார்.

  • Share this:
    தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளரான பட்டாபிராமன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் விஜயவாடா அருகிலுள்ள மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மத்திய அலுவலகத்தை இன்று மாலை முற்றுகையிட்டனர்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அலுவலகத்துக்குள் நுழைந்து விடுவார்கள் என்று கருதி அங்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஆனால் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சி அலுவலத்தில் கேட்டை தள்ளி திறந்து அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாரையும் தள்ளிவிட்டு உள்ளே புகுந்து கையில் கொண்டு வந்திருந்த கட்டைகளால் அங்கிருந்த கண்ணாடிகள் மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றை அடித்து உடைத்தனர். அதேநேரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தெலுங்குதேசம் கட்சி அலுவலகங்கள் அடித்து உடைக்கப்பட்டன.

    இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. எனவே முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறினார். மேலும் இன்று நடைபெற்ற சம்பவங்கள் பற்றியும், ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் புகார் அனுப்பியுள்ளார். அதனைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஆட்சியை எதிர்த்து இன்று(20-10-2021) மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு சந்திரபாபு நாயுடு அழைப்புவிடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: