Home /News /national /

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காண டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் புதிய திட்டம்

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காண டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் புதிய திட்டம்

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காணும் வகையில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை, சாந்தினி சௌக் மற்றும் மஜ்னு கா திலாவை உணவு மையங்களாக மாற்ற இருப்பதாக அறிவித்தார். 

வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காணும் வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை, சாந்தினி சௌக் மற்றும் மஜ்னு கா திலாவை உணவு மையங்களாக மாற்ற இருப்பதாக அறிவித்தார். 

டெல்லியில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் தொர்பாக முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில், இன்று கடுமையான வேலையின்மை பிரச்சனை உள்ளது. டெல்லியிலும் வேலையில்லாதவர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், 12-13 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கியுள்ளோம், அடுத்த 5 ஆண்டுகளில், 20 லட்சம் வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டுள்ளோம்.

பிரமாண உணவுகள்... மார்க்கெட்டிங் செய்த ஹோட்டலுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு

இதனால் இந்தியாவின் 'உணவுத் தலைநகர்' என அழைக்கப்படும் டெல்லியில்  புதுப்பிக்கப்பட்ட உணவு மையங்களை அமைக்கவுள்ளது. திபெத்திய மற்றும் பஞ்சாபி உணவுகளுக்கு டெல்லியில் பல்வேறு சந்தைகள் உள்ளன. அவற்றிற்கான உட்கட்டமைப்பு, சாலைகள், மின்சாரம், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவோம்.

இந்த உணவு மையங்களில் உணவு பாதுகாப்பு தரத்தை மேம்படுத்துவோம், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதை உறுதி செய்வோம். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மஜ்னு-கா-திலா மற்றும் சாந்தினி சௌக் ஆகிய  2 மையங்கள் தொடங்கப்படும்.

நாட்டின் சிறந்த கட்டிடக்கலை நிறுவனங்கள் தங்கள் வடிவமைப்புகளை வழங்குவதற்காக ஒரு வடிவமைப்பு டெண்டர் நடத்தப்படும். அதன்பின்  12 வாரங்களுக்குள் ஒரு வடிவமைப்பை இறுதி செய்து அவர்களுக்கு வேலை வழங்கவுள்ளோம். பின்னர் மற்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று கெஜ்ரிவால் கூறினார்.



டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமையன்று இளைஞர்களுக்கான "இலவச" ஸ்போக்கன் இங்கிலீஷ் திட்டத்தை அறிவித்தார். 12-ஆம் வகுப்பு வரை படித்த, தகவல் தொடர்புத் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். இது அவர்களின் அவர்களின் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த உதவும்.

950 ரூபாய் வைப்புத்தொகையுடன் இந்தத் திட்டத்தில் சேரலாம். பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு இந்தத் தொகை திரும்பப் பெறப்படும். கட்டம்-1 இல், டெல்லி முழுவதும் 50 மையங்களில் ஒரு வருடத்தில் 1 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் . பின்னர், அது விரிவுபடுத்தப்படும். 18-35 வயதுடைய இளைஞர்கள் இந்த 3-4 மாத கால படிப்பில் சேரலாம். நேரங்கள் நெகிழ்வானதாக இருக்கும்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Arvind Kejriwal, Delhi, English, Food, Unemployment

அடுத்த செய்தி