முகப்பு /செய்தி /இந்தியா / மாணவிகளின் குளியல் காட்சிகளை படமாக்கி, ஆண் நண்பருக்கு பகிர்ந்த சகமாணவி... அதிர்ச்சி சம்பவம்

மாணவிகளின் குளியல் காட்சிகளை படமாக்கி, ஆண் நண்பருக்கு பகிர்ந்த சகமாணவி... அதிர்ச்சி சம்பவம்

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம்

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம்

சக மாணவி ஒருவர் சுமார் 60 மாணவிகளின் வீடியோக்களை படமெடுத்து அதை ஆண் நண்பருக்கு பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chandigarh, India

பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் குளிக்கும் காட்சிகளை சக மாணவி ஒருவரே வீடியோ எடுத்த அதிர்ச்சி சம்பவம் சண்டிகரில் அரங்கேறியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள முன்னணி பல்கலைக்கழகமான சண்டிகர் பல்கலைக்கழகக்தில் நேற்று இரவு மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பல்கலைக்கழக விடுதியில் பல மாணவிகள் தங்கி பயின்று வரும் நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் சக மாணவிகள் பாத்ரூமில் குளிக்கும் காட்சிகளை பதிவு செய்து அதை ஆண் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாள்களாக இந்த குற்றச்செயலில் இந்த மாணவி ஈடுபட்டு வந்துள்ள நிலையில், சுமார் 60 மாணவிகளின் வீடியோக்கள் அந்த ஆணுக்கு பகிரப்பட்டு, அது ஆபாச இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் இந்த காட்சிகள் லீக் ஆகியுள்ளன.

இந்த விவரம் மாணவிகளுக்கு தெரியவந்தபோது அதிர்ச்சி அடைந்த நிலையில், குற்றம் செய்த மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட மாணவி மீது இபிகோ 354சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் உணர்ச்சிகரமான விஷயம் என்பதால் கவனத்துடன் கையாள்வதாக மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் தெரிவித்துள்ளார். மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர், விவகராத்தில் உரிய நீதி வழங்கப்படும் என்றார். ஊடகங்களும் இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் செயல்பட அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். பஞ்சாப் மாநில பெண்கள் ஆணையமும் இதில் நேரடியாக களமிறங்கி தலையிட்டுள்ளது. பஞ்சாப் பெண்கள் ஆணைய தலைவர் மனிஷா குலாடி இது தொடர்பாக கூறுகையில், இது சீரியாசான விவகாரம் என்பதால், துரிதமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்டோர் யாரும் தப்பிக்க முடியாது என பெற்றோருக்கு உறுதி அளிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தினமும் 10-15 ஆண்களால் பாலியல் பலாத்காரம்.. ஸ்பாவில் வேலை பார்க்கும் இளம்பெண் பகீர் புகார்

வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த முக்கிய குற்றவாளியான ஆண் நண்பரை கைது செய்ய பஞ்சாப் போலீசார் சிம்லா விரைந்துள்ளனர்.

First published:

Tags: Cyber crime, Leak video, Online crime, Punjab, Women hostel