ஹோம் /நியூஸ் /இந்தியா /

கண்காணிப்பு சாதனம் இல்லாத பஸ், டாக்ஸிகளுக்கு நவம்பர் முதல் ஃபைன் - சண்டிகரில் புது ரூல்

கண்காணிப்பு சாதனம் இல்லாத பஸ், டாக்ஸிகளுக்கு நவம்பர் முதல் ஃபைன் - சண்டிகரில் புது ரூல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மத்திய மோட்டார் வாகன விதி 125 (H) இன் கீழ் அனைத்து பொது சேவை வாகனங்களிலும் இருப்பிட கண்காணிப்பு சாதனம் மற்றும் அவசர எச்சரிக்கை பொத்தான்கள் பொருத்தப்படுவதை கட்டாயமாக்கியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chandigarh, India

  மாநில போக்குவரத்து ஆணையம் (STA) சண்டிகரில் உள்ள அனைத்து பொது சேவை வாகனங்களுக்கும் VLT சாதனம் மற்றும் பேனிக் பட்டன் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி ஐந்து மாதங்கள் ஆகிறது, ஆனால் இதுவரை 35% வாகனங்கள் மட்டுமே அவ்வாறு செய்துள்ளன.

  2018 ஆம் ஆண்டில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மோட்டார் வாகன (இருப்பிட கண்காணிப்பு சாதனம் மற்றும் அவசர பொத்தான்உத்தரவை அறிவித்தது. மேலும் மத்திய மோட்டார் வாகன விதி 125 (H) இன் கீழ் அனைத்து பொது சேவை வாகனங்களிலும் இருப்பிட கண்காணிப்பு சாதனம் மற்றும் அவசர எச்சரிக்கை பொத்தான்கள் பொருத்தப்படுவதை கட்டாயமாக்கியது. சண்டிகர், இந்த ஆண்டு ஜூன் 30 முதல் செயல்படுத்தத் தொடங்கியது.

  மாநில போக்குவரத்து ஆணையம் (STA) சண்டிகரில் உள்ள அனைத்து பொது சேவை வாகனங்களுக்கும் வாகன இருப்பிட கண்காணிப்பு VLT சாதனம் மற்றும் பேனிக் பட்டன் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி ஐந்து மாதங்கள் ஆகிறது. சாதனம் இல்லாமல் நகர சாலைகளில் இயங்கும் அனைத்து பொது சேவை வாகனங்களுக்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று சண்டிகர் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை 35% வாகனங்கள் மட்டுமே அவ்வாறு செய்துள்ளன.

  சென்னைவாசிகளே உஷார்..! சிக்னல்ல பார்த்து போங்க - புது ரூல் இன்று முதல் அமல்

  எஸ்டிஏ செயலர் அமித் குமார் கூறுகையில், “அடுத்த மாதம் முதல் மேக்சி வண்டிகள், மோட்டார் வண்டிகள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட பொது சேவை வாகனங்களின் உரிமையாளர்களை இந்த சாதனங்களை நிறுவுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம், நாங்கள் அடுத்த மாதம் முதல் அபராதம் விதிக்கத் தொடங்குவோம்.

  தற்போதைய நிலையில்,  மூன்றுசக்கர வண்டிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அடுத்த கட்டங்களில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன," என்று அவர் கூறினார்.

  நவம்பர் முதல், வாகன இருப்பிட கண்காணிப்பு (VLT) சாதனம் இல்லாமல் நகர சாலைகளில் இயங்கும் அனைத்து பொது சேவை வாகனங்களுக்கும் கட்டணம் விதிக்கப்படும்.

  ஃபிட்னஸ் சோதனையின் போது புதிய வாகனங்களுக்கு VLT அமைப்பு பொருத்தப்படுவது உறுதி செய்யப்பட்டாலும், பழைய வாகனங்களுக்கு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MoRTH) கீழ் உள்ள எம்பேனல் விற்பனையாளர்களிடமிருந்து உரிமையாளர்கள் அதை நிறுவ வேண்டும் என்று STA செயலாளர் தெரிவித்தார்.

  Published by:Ilakkiya GP
  First published: