ஹோம் /நியூஸ் /இந்தியா /

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் வைப்பு

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் வைப்பு

பகத் சிங்கின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் சண்டிகர் விமான நிலையத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் சூட்டுப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களிடம் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் உரையாற்றுவார். இந்த மாதத்தின் மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டு உயிர் தியாகம் செய்த பகத் சிங்கின் பிறந்தநாள் செப்டம்பர் 28 தேதி கொண்டாடப்படுகிறது. பகத் சிங் பிறந்தநாளுக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், பகத் சிங்கிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் பிறந்த பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் விமான நிலையம் என பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் கூறுகையில், "செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று அமுதப் பெருவிழாவின் ஒரு விசேஷமான நாள் வரவிருக்கிறது. இந்த நாளன்று தான் நாம் பாரத அன்னையின் வீரம்நிறைந்த உத்தம புதல்வானான பகத் சிங்குடைய பிறந்த நாளைக் கொண்டாடுவோம். பகத் சிங் அவர்களின் பிறந்த நாளுக்கு சற்று முன்பாக, அவருக்கு மரியாதையை அர்ப்பணிக்கும் பொருட்டு ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது.

  சண்டீகட்டின் விமான நிலையத்திற்கு இனி தியாகி பகத் சிங் அவர்களின் பெயர் சூட்டப்படும். இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று. சண்டிகர், பஞ்ஜாப், ஹரியானா, இன்னும் தேசத்தின் அனைத்து மக்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

  நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்து ஊக்கம் பெற வேண்டும், அவர்களின் லட்சியங்களைப் பின்பற்றி நடந்து, அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க வேண்டும், இதுவே, அவர்களுக்கு நாம் செலுத்தும் நினைவாஞ்சலிகளாகும். உயிர்த்தியாகிகளின் நினைவிடங்கள், அவர்களின் பெயரில் இருக்கும் இடங்கள், அமைப்புக்களின் பெயர்கள் ஆகியன, நமது கடமைகள் குறித்து நமக்கு உத்வேகம் அளிக்கின்றன.

  இதையும் படிங்க: வெற்று கோஷங்களால் கையில் இருக்கும் ரத்த கறைகளை மறைக்க முடியாது... பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி

  தியாகி பகத் சிங்கின் பெயரை சண்டிகர் விமானநிலையத்திற்குச் சூட்டியதும் கூட இதே திசையில் வைக்கப்பட்ட மேலும் ஒரு முன்னேற்றப்படியாகும். வரும் செப்டம்பர் 28ஆம் தேதியின் போது, ஒவ்வொரு இளைஞரும் புதிய ஒரு முயற்சியில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று பேசினார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Airport, Bhagat Singh, PM Modi, Punjab