Home /News /national /

பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மீண்டும் 3வது அணி... தீவிரம் கட்டும் சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி

பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மீண்டும் 3வது அணி... தீவிரம் கட்டும் சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி

பாஜக, காங்கரஸ் அற்ற 3-வது அணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே கணிக்கப்படுகிறது. 3வது அணி அமையும் பட்சத்தில் மம்தாவுடன் தற்போது இணக்கம் காட்டி வரும் ஸ்டாலின் அதில் இணைவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

பாஜக, காங்கரஸ் அற்ற 3-வது அணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே கணிக்கப்படுகிறது. 3வது அணி அமையும் பட்சத்தில் மம்தாவுடன் தற்போது இணக்கம் காட்டி வரும் ஸ்டாலின் அதில் இணைவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

பாஜக, காங்கரஸ் அற்ற 3-வது அணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே கணிக்கப்படுகிறது. 3வது அணி அமையும் பட்சத்தில் மம்தாவுடன் தற்போது இணக்கம் காட்டி வரும் ஸ்டாலின் அதில் இணைவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

  மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோரை தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ் சந்தித்து பேசியிருப்பதைத் தொடர்ந்து, தேசிய அளவில் மீண்டும் 3-வது அணி உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

  காங்கிரசுடன் சுமுகமாக இயங்கி வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா, சோனியா காந்தியை கடந்த ஆண்டு முதல் சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினார், அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளை திரிணமுல் பக்கம் வளைத்துப் போட்டார். சோனியா தலைவராக இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எங்கே உள்ளது எனக் கேள்வியெழுப்பினார். ஒரு தலைவர் எந்நேரமும் வெளிநாட்டில் இருக்க முடியாது என ராகுலை சூசகமாக சாடினார். காங்கிரசுடன் இனி இணக்கமே இல்லை எனக் கூறிய அவர் காங்கிரசை காட்டிலும் மத்திய பாஜக-வை பன்மடங்கு எதிர்த்து வருகிறார். அதனால் காங்கிரஸ் அற்ற 3-வது எதிர் அணியை உருவாக்க தீவிரம் காட்டி வருகிறார்.

  இதனிடையே, மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருடன் மம்தாவுக்கு மோதல் ஏற்பட்டபோது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மம்தாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். நீட் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுடன் திமுக-வுக்கு மோதல் நீடித்து வரும் நிலையில் ஒத்த கருத்தை உடைய மு.க.ஸ்டாலினுடன் இணக்கம் காட்டி வரும் மம்தா, தொலைபேசியில் உடனே தொடர்பு கொண்டு, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்துவோம் என பேசியிருந்ததை ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

  அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் மோதி வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் மம்தா பேசினார். தேசிய அணிக்குத் தலைமை தாங்கும் விருப்பத்தை உள்ளூர கொண்டுள்ள கேசிஆர் உடனே இசைவு தெரிவித்ததுடன், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவையும் சந்தித்து, பாஜக-வுக்கு எதிரான போரில் பங்கேற்க ஆதரவு பெற்றார். அதைத் தொடர்ந்து, மும்பைக்கு நேற்று சென்ற கேசிஆர், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார். பின்னர், பேட்டி அளித்த கேசிஆர், சந்திப்பின் விளைவாக ஏற்பட்ட நல்ல முடிவை விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தார்.

  இதையும் படிங்க: சர்வதேச தாய்மொழி தினம் : இந்தியாவில் பேசப்படும் தாய் மொழிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்


  தொடர்ந்து பேசிய உத்தவ் தாக்கரேவும், இந்துத்துவா தவறான அரசியலை போதிக்கவில்லை என்றும் சிலர் தனிப்பட்ட நலனுக்காக தேசத்தை நரகத்தில் தள்ளியதாகவும் பாஜக-வை மறைமுகமாக சாடினார். உத்தவ் தாக்கரேவை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பாஜக-வுக்கு எதிரான வலுவான அணியை அமைப்பது பற்றி கேசிஆர் ஆலோசனை நடத்தினார். சரத் பவாரின் ஆசி கிடைத்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்த மம்தா, காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது என உறுதிபட தெரிவித்திருந்தார். உத்தவ் தாக்கரேவும் சந்தர்ப்ப வசத்தால் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார். அதனால், காங்கிரசை கைவிட்டு மம்தா மற்றும் கேசிஆருடன் பாஜகவுக்கு எதிராக அணி வகுக்க வாய்ப்புள்ளது. தேவேகவுடாவும், கேசிஆரிடம் பச்சைக் கொடி காட்டி விட்டதால், மம்தா விருப்பத்திற்கேற்ப, காங்கரஸ் அற்ற 3-வது அணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே கணிக்கப்படுகிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசற்ற கூட்டணியில் சேருவதில் தயக்கம் காட்டாது. காங்கிரஸ் அற்ற 3வது அணி அமையும் பட்சத்தில் மம்தாவுடன் தற்போது இணக்கம் காட்டி வரும் ஸ்டாலின் இணைவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
  Published by:Murugesh M
  First published:

  Tags: BJP, Chandrasekara rao, Congress, Mamata banerjee

  அடுத்த செய்தி