கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு இருப்பது உண்மை: அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்!

கோப்புப் படம்

கொரோனா 3வது ஆலைக்கு  அதிக வாய்ப்பு உள்ளதால் ஆக்சிஜன் உற்பத்தியை  அதிகரித்து வருகிறோம். கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள  போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

  • Share this:
கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பது உண்மைதான் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனா 2வது அலையால் இந்தியாவில் அதிகம் பாதிப்பை சந்தித்த மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. அங்கு தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்ததோடு, உயிரிழப்பும் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து டெல்லியில் தீவிர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து டெல்லியில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேவேளையில் கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் ஒன்பது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை  அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார்.  மொத்தம் 22 ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படவுள்ளது.  17 டன் கொள்ளளவு கொண்ட இவை மூலம்  ஆயிரக்கணக்கான படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதியை அளிக்க முடியும்.

மேலும் படிக்க.. தட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை.. தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றம்..

காணொலிக் காட்சி மூலம் இதனை தொடங்கி வைத்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “ டெல்லியில், சராசரியாக நாளொன்றுக்கு 150  டன் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படும் நிலையில், கொரோனா 2வது அலையின்போது நாளொன்றுக்கு 700 டன்  ஆக்சிஜன் தேவைப்பட்டதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

கொரோனா 3வது ஆலைக்கு  அதிக வாய்ப்பு உள்ளதால் ஆக்சிஜன் உற்பத்தியை  அதிகரித்து வருகிறோம். கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள  போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் நன்கு ஒத்துழைப்பு அளித்ததாக அவர்களுக்கு பாராட்டு தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது அலை டெல்லியை தாக்கக்கூடாது என்று வேண்டிகொள்வதாகவும் அவ்வாறு தாக்கினால்,  மீண்டும் கொரோனாவை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அவர் கூறினார்
Published by:Murugesh M
First published: