• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரளாவில் 19-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

கேரளாவில் 19-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

 கேரளாவில் 19-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

கேரளாவில் 19-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

கேரளாவில் மிக கனமழை காரணமாக இடுக்கி, திருச்சூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கோட்டயத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

  • Share this:
    தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால், கேரளாவில் கடலோர மாவட்டங்கள் உட்பட மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது.

    தொடர்ந்து, வருகின்ற 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோட்டயம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் உட்பட 7 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் மற்றும் மலைப்பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, கோட்டயம் மாவட்டத்தில் காஞ்சிரப்பள்ளியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில், கார் ஒன்றை பொதுமக்கள் கயிறு கட்டி மீட்க போராடினர்.



    மேலும், கோட்டயத்தில் பூஞ்சார் பகுதியில் கேரள அரசுப் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து, ஓட்டுநரின் இருக்கை வழியாக பயணிகள் பத்திரமாக மீட்டகப்பட்டனர்.

    முக்கியமான அணைகளில் இருந்து மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தின் முக்கிய அணைகளின் ஒன்றான இடுக்கி அணைக்கு வரும் வெள்ளத்தின் அளவு உயர்ந்துள்ளது. இடுக்கி அணைக்கு வரும் வெள்ளத்தின் அளவு அபாய கட்டத்தை எட்டியுள்ளதால் அங்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: