முகப்பு /செய்தி /இந்தியா / வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... அதீத கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... அதீத கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Rain forecast :வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :

ஒடிசா - மேற்கு வங்க கடலோரப் பகுதியை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்பொழுது ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வடமேற்கு அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் -தெற்கு ஓடிசா அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா பகுதி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Must Read : வங்கி அதிகாரிகளின் தரக்குறைவான பேச்சு.. அவமானத்தால் பெண் தற்கொலை - கடலூரில் பரபரப்பு

top videos

    இதன் காரணமாக ஒடிசா பகுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், மேலும் சத்தீஸ்கர் கோவா மற்றும் கொங்கன் பகுதிகள், மேற்கு மத்திய பிரதேஷ், கிழக்கு மத்திய பிரதேஷ் மற்றும் குஜராத் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Bay of Bengal, Indian Meteorological Center, Rain Forecast