புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் எதிர்கொள்ள உள்ள சவால்கள்!

நாட்டின் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த ஓ.பி.ராவத் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, நாட்டின் 23-வது தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேற்றுள்ளார்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் எதிர்கொள்ள உள்ள சவால்கள்!
சுனில் அரோரா (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: December 2, 2018, 10:36 PM IST
  • Share this:
நாட்டின் 23-வது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மக்களவைத் தேர்தலை தலைமையேற்று நடத்த உள்ள சுனில் அரோரா யார்? அவர் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன என்பது குறித்துப் பாரக்கலாம்.

நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த ஓ.பி.ராவத் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, நாட்டின் 23-வது தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பதவியேற்றுள்ளார். 62 வயதான சுனில் அரோரா, 1980-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

ராஜஸ்தானின் தோல்பூர், அல்வார், நாகவூர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய அவர், 1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை அந்த மாநில முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றினார்.


பின்னர் மத்திய அரசு பணிக்கு சென்ற அவர், 1999-ம் ஆண்டு முதல் 2002 வரை விமானப் போக்குவரத்துத் துறையின் இணைச் செயலாளராக பணியாற்றினார். மேலும் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையிலும், தொழிற்சாலைகள் மற்றும் முதலீட்டு துறைகளிலும் பணியாற்றினார். பின்னர், 2005-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநில முதலமைச்சரின் முதன்மை செயலாளராக அவர் பணியாற்றினார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த அரோரா, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி ஓய்வுபெற்ற நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேர்தல் ஆணையராக பணியமர்த்தப்பட்டார்.

டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்றுக்கொண்ட சுனில் அரோராவுக்கு, தேர்தல் ஆணையர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்றார்.எதிர்கொள்ள உள்ள சவால்கள்:

தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள சுனில் அரோரா முன்பு பல்வேறு சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல். நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களும் பங்கேற்க உள்ள இந்த பிரம்மாண்ட திருவிழாவை நடத்தி முடிப்பது பெரும் சவாலாக அமையும்.

இதேபோல் அண்மையில் கலைக்கப்பட்ட காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டு ஆந்திரா, மகாராஷ்ட்ரா, ஒடிசா, ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. 65-வது வயதில் ஓய்வு பெறுவார் என்பதால், அதற்கு முன்பாக தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களும் இவரது தலைமையிலேயே நடைபெற உள்ளன.

Also watch

First published: December 2, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading