முகப்பு /செய்தி /இந்தியா / புகைப்பழக்கம் காரணமாக இன்சூரன்ஸ் மறுப்பு.. காப்பீடு நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்று வென்ற நபர்

புகைப்பழக்கம் காரணமாக இன்சூரன்ஸ் மறுப்பு.. காப்பீடு நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்று வென்ற நபர்

புகை பழக்கத்தால் நிராகரிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை

புகை பழக்கத்தால் நிராகரிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை

சிகரெட்டில் நிகோடின் இருப்பது உண்மை. ஆனால் இது நிரூபிக்கப்பட்ட போதைப்பொருள் அல்ல. மேலும், சிகரெட் பிரயோகம் காரணமாக இவருக்கு புற்று நோய் ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat | rajgot

செயின் ஸ்மோக்கரின் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை நிராகரித்த காப்பிட்டு நிறுவனத்தை ஒரு மாதத்திற்குள் காப்பீட்டு தொகையை வழங்க  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரத்தில் வசிப்பவர் மதுகர் வோரா. இவர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர். நாளொன்றுக்கு 10க்கும் மேல் என்ற எண்ணிக்கையில்  சிகரெட்களை புகைப்பார். இந்நிலையில், நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டு பிப்ரவரி 2018 இல் ராஜ்கோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அகமதாபாத் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ செலவாக ரூ.6.53 லட்சம் வசூலிக்கப்பட்டது. அந்த செலவை காப்பீட்டு நிருவத்திடம் இருந்து பெறுவதற்காக வோரா விண்ணப்பித்திருந்தார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனமோ,  அவர் போதைக்கு அடிமையானவர் என்ற அடிப்படையில் அவரது கோரிக்கையை நிராகரித்தது.

5ஜி ஏலம் நிறைவு: பாதிக்கு மேல் கைப்பற்றிய ரிலையன்ஸ் ஜியோ- உலகத் தரமான சேவையை வழங்குவோம் என உறுதி

வோரா உடனே இந்த பிரச்னையை தீர்க்க, நுகர்வோர்  ஆணையத்தை நாடினார்.  இது தொடர்பான விசாரணையில், ‘சிகரெட்டில் நிகோடின் இருப்பது உண்மை. ஆனால் இது நிரூபிக்கப்பட்ட போதைப்பொருள் அல்ல. மேலும், சிகரெட் பயன்பாடு காரணமாக இவருக்கு புற்று நோய் ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆதாரமற்ற ஆட்சேபனைகளை உருவாக்கி காப்பீட்டு நிறுவனம் தனது சேவையை தவறவிடுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

காப்பீட்டு நிறுவனம் "புகார்தாரர் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 15 முதல் 20 சிகரெட்டுகள் புகைப்பதாக எங்கள் விசாரணை மற்றும் மருத்துவமனைகளின் ஆவணங்களின் போது தெரியவந்துள்ளது. எனவே, பாலிசியின் நிபந்தனை எண் 4.8 இன் படி இந்த கோரிக்கை நிராகரிப்புக்கு உட்பட்டது. மது அல்லது போதைப் பொருளைப் பயன்படுத்துதல் அல்லது அத்தகைய துஷ்பிரயோகம் அல்லது அடிமையாதல் போன்றவற்றில் பாலிசியின் நிபந்தனையின்படி, கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்று காப்பீட்டாளர் வாதிட்டார்.

ஆனால் அது முறையன்று. போதைக்கு அவர் அடிமையாக்கவில்லை. எனவே , இன்சூரன்ஸ் நிறுவனம்  காப்பிட்டு பணம் 6 லட்சத்துடன், 6 சதவீத வட்டி, ரூ. 5,000 உம் சேர்த்து , 30 நாட்களுக்குள் வழங்க கமிஷன் உத்தரவிட்டது.

First published:

Tags: Health, Insurance, Smoking