பாரம்பரிய முறைகளால் தண்ணீர் பஞ்சத்தைத் துரத்திய வடகிழக்கிந்திய மக்கள்..!

குறைவான தண்ணீர் தேவைப்படும் மிளகு விவசாயத்துக்கு இந்த சொட்டுநீர் சேமிப்பை பாசனத்துக்கு உபயோகிக்கின்றனர்.

பாரம்பரிய முறைகளால் தண்ணீர் பஞ்சத்தைத் துரத்திய வடகிழக்கிந்திய மக்கள்..!
நாகாலாந்தின் நீர் மேலாண்மை
  • News18
  • Last Updated: August 24, 2019, 1:52 PM IST
  • Share this:
பாரம்பரிய நீர் சேமிப்பு முறைகள் மூலம் தண்ணீர் பஞ்சமே இல்லாமல் செழிப்பான வாழ்க்கையை வழிநடத்துகின்றனர் வடகிழக்கு மாநில மக்கள்.

பருவமழைக் காலங்களில் அதிகப்படியான மழையால் வெள்ளமும் மழை இல்லா காலங்களில் நீர் பஞ்சமும் மலைப்பகுதி குடியிருப்புகளில் நீடித்து இருக்கும். ஆனால், ஜபோ, சியோ-ஒழி, மூங்கில் சொட்டு நீர் பாசனம் ஆகிய பாரம்பரிய முறைகள் மூலம் நீர் மேலாண்மையில் முன்னோடிகளாக உள்ளனர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்.

ஜபோ என்பது ஓடும் நீரை ஒரே இடத்தில் நீரை வழியச் செய்து சேமிப்பது ஆகும். இதனாலே மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் நாகாலாந்து மக்கள் தண்ணீர் பஞ்சத்தைத் தவிர்த்து வருகின்றனர். மழை நேரங்களில் மலைச் சரிவுகளில் குளங்கள் வெட்டி அந்த நீரை சேமித்து விவசாயம், மீன் வளர்ப்பு என அசத்துகின்றனர்.


நெல் வயல்களில் வாய்க்கால் முறை மூலம் நீரை தேக்கி அதில் மீன் வளர்ப்பும் செய்கின்றனர் வடகிழக்கு மக்கள். சியோ-ஒழி மற்றும் மூங்கில் சொட்டு நீர் பாசனம் ஆகிய இரண்டும் மூங்கில் தண்டுகள் மூலம் மழைநீரை சேமிக்கும் ஒரு முறை ஆகும். குறைவான தண்ணீர் தேவைப்படும் மிளகு விவசாயத்துக்கு இந்த சொட்டுநீர் சேமிப்பை பாசனத்துக்கு உபயோகிக்கின்றனர்.

வடகிழக்கு இந்தியாவில் நீர் மேலாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் அத்தனை முறைகளும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே அப்பகுதிகளில் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: வேலூரில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க களத்தில் இறங்கிய கிராம பெண்கள்..!
First published: July 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading