குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க மேற்குவங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர
மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு தினத்தின்பொது ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் ஊர்திகள் அமைக்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டும் குடியரசுத் தினமான ஜனவரி 26ம் தேதி அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த அணிவகுப்பில் பங்கேற்க மேற்கு வங்க மாநிலத்தின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், " மத்திய அரசின் முடிவால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மத்திய அரசின் இந்த அணுகுமுறையால் மேற்கு வங்க மக்கள் அனைவரும் மிகவும் வேதனையடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எவ்வித காரணமும் தெரிவிக்காதது. குழப்பம் அடைய செய்கிறது.
இதையும் படிங்க: ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், புதிய இந்தியாவின் முதுகெலும்பாக மாறி உள்ளன: பிரதமர் மோடி
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வங்கம் முன்னணியில் இருந்தது மற்றும் பிரிவினையின் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய விலையை செலுத்தியுள்ளது. நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் அர்ப்பணிப்பு மற்றும் அவரது ஐ.என்.ஏ.வின் 125வது ஆண்டை குறிக்கும் வகையில் இது தொடர்பாக ஊர்தியில் குறிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், ரவீந்திரநாத் தாகூர், ஸ்வாமி விவேகானந்தர், தேஷ்பந்து சித்தரஞ்சன் தாஸ், ஸ்ரீ அரவிந்தோ, மாதங்கினி ஹஸ்ரா, நஸ்ருல், பிர்சா முண்டா மற்றும் பல தேசபக்தர்களின் உருவப்படங்களை ஊர்தி சுமந்து செல்கிறது.
மேலும் படிக்க: ’எல்லோரும் 2 டோஸ் போட்டவர்கள்’ ஐஐடி ஹைதராபாத் மாணவர்களை துரத்தும் கொரோனா!
மத்திய அரசின் அணுகுமுறை மேற்கு வங்க மக்களை மிகவும் வலி அடைய செய்துள்ளது. எனவே, மத்திய அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்து குடியரசு தினவிழாவில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.