Home /News /national /

கொரோனா காலத்தில் எந்த ஏழையும் பட்டினியுடன் தூங்கக்கூடாது என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது : பிரதமர் மோடி

கொரோனா காலத்தில் எந்த ஏழையும் பட்டினியுடன் தூங்கக்கூடாது என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது : பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வலுவான வீடுகளைப் பெற்றுள்ளது. அவர்களில் பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கொரோனா பாதிக்கப்பட்ட காலத்தில் இந்தியாவில் எந்த ஏழையும் பட்டினியுடன் தூங்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு முழு முயற்சியை மேற்கொண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்ராம்பூரில், சரயு கால்வாய் தேசியத் திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த உத்தரப்பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த புதல்வர் குரூப் கேப்டன் வருண் சிங்கின் உயிரைக் காப்பாற்ற, மருத்துவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். வருண் சிங்கின் குடும்பத்தினருடன் நாடு இன்று உள்ளது.

    நாட்டின் ஆறுகளின் தண்ணீர் முறையாகப் பயன்படுத்தப்படுவதால், விவசாயிகளின் வயல்களில் போதிய தண்ணீர் பாய்கிறது. சிந்தனை நேர்மையாக இருந்தால், பணியும் உறுதியாக இருக்கும் என்பதற்கு சரயு கால்வாய் தேசிய திட்ட நிறைவேற்றம் சான்றாக உள்ளது.

    Also Read : நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்டது குறித்து ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் விளக்கம்
    இந்தத் திட்டத்தின் பணிகள் தொடங்கிய போது, அதன் செலவு மதிப்பீடு வெறும் ரூ.100 கோடிதான். இன்று சுமார் ரூ.10 ஆயிரம் கோடிகளைச் செலவழித்து இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முந்தைய அரசுகளின் புறக்கணிப்பால், நாடு 100 மடங்கு பணத்தை ஏற்கனவே அளித்துள்ளது.


    50 ஆண்டுகளில் சரயு கால்வாய் திட்டத்தில் செய்யப்பட்டதை விட 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் அதிகப் பணிகளை நாங்கள் செய்துள்ளோம்.


    நீண்ட காலமாக நிலுவையில் இருந்த திட்டங்களான பான் சாகர் திட்டம், அர்ஜூன் சகாயக் பாசன திட்டம், எய்ம்ஸ் மற்றும் கோரக்பூர் உர ஆலை ஆகியவற்றை அதிவேகமாக எனது அரசு நிறைவேற்றியுள்ளது.


    Also Read : பிபின் ராவத் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப இயலாது : குடியரசு தலைவர்
     கொரோனா காலத்தில், இந்தியாவில் எந்த ஏழையும் பட்டினியுடன் தூங்கக்கூடாது என்று உண்மையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்போது வரை, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், இலவச ரேசன் வழங்குவது ஹோலி பண்டிகை காலத்துக்குப் பிறகும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


    பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வலுவான வீடுகளைப் பெற்றுள்ளது. அவர்களில் பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

     
    Published by:Musthak
    First published:

    Tags: PM Modi

    அடுத்த செய்தி