இந்தியக் குடியுரிமை சட்ட மசோதா- மத்திய அரசை எதிர்க்கும் 3 மாநிலங்கள்... சட்டம் என்ன சொல்கிறது?

இச்சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் ஒரு மாபெரும் போராட்ட ஊர்வலத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் மம்தா.

இந்தியக் குடியுரிமை சட்ட மசோதா- மத்திய அரசை எதிர்க்கும் 3 மாநிலங்கள்... சட்டம் என்ன சொல்கிறது?
குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம்
  • News18
  • Last Updated: December 13, 2019, 10:14 PM IST
  • Share this:
இந்தியக் குடியுரிமை சட்ட மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்ததிலிருந்து மாநில அரசுகள் சில இச்சட்டத்தை தத்தமது மாநிலங்களில் அமல்படுத்த முடியாது என எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர். 

ஆனால், இச்சட்டத்தை அமல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என மாநில அரசுகளுக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

இதுகுறித்து நியூஸ் 18 சிஎன்என்-க்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், “இந்தியக் குடியுரிமை சட்ட மசோதா மத்திய அரசின் பட்டியலைச் சார்ந்தது. மாநில அல்லது கன்கரன்ட் பட்டியலைச் சார்ந்த மசோதா என்றால் மாநில அரசுகளின் கருத்துகளுக்கு இடமளிக்க முடியும். ஆனால், இதற்கு மாநில அரசுகள் மாற்றுக் கருத்து தெரிவிக்க முடியாது” என்றார்.


இதேபோல், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை, ரயில்வே துறை, குடியுரிமை சார்ந்த விஷயங்கள் மத்திய அரசின் பட்டியலின் கீழ் வருவன. இதுபோல் மொத்த 97 அம்சங்கள் நிறைந்த பட்டியலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது மத்திய அரசு. இதில் மாநில அரசுகள் கருத்துத் தெரிவிக்க முடியாது.

குடியுரிமை சட்ட மசோதாவுக்கு மேற்குவங்கம், கேரளா மற்றும் பஞ்சாப் அரசுகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் ஒரு நாளுக்கு முன்னரே இதற்கான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அதைத்தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ஆகியோர் தங்களது எதிர்ப்பை முன்வைத்தனர். நிச்சயமாக தங்களது மாநிலங்களில் இச்சட்டத்தை அமல் செய்ய முடியாது என்றே அறிவித்தனர்.சர்ச்சைக்குரிய இந்த மசோதா மூலம், முதன்முறையாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தோருக்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க அரசு முன்வந்துள்ளது.

இரவோடு இரவாக நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று இந்த சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இச்சட்டம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த இஸ்லாமிய மதத்தைச் சாராதோருக்கு குடியுரிமை பெற வசதியாய் உள்ளது. இத்தகைய சமமற்ற சட்டம் அரசியலமைப்பின் சம உரிமைக்கு எதிரானதாய் உள்ளதாக எதிர்கட்சிகள் ஆவேசம் அடைந்து வருகின்றன.

வடகிழக்கு இந்தியாவில் இச்சட்டத்துக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அசாம் மாநிலம் கடுமையான பதற்ற நிலையில் உள்ளது. அசாம் மக்களின் போராட்டங்களைச் சமாளிக்க மத்திய அரசு ராணுவத்தைக் களம் இறக்கியுள்ளது.

“மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவின் குணாதிசயத்தையே இச்சட்டம் தாக்குகிறது. இதுபோன்ற அரசியலமைப்புக்கு எதிரான சட்டத்துக்கு எங்கள் மாநிலத்தில் ஒருநாளும் இடமளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அம்ரீந்தர் சிங், “அரசியலமைப்புக்கு எதிரான இச்சட்டத்தை காங்கிரஸ் பெரும்பான்மையுடன் பஞ்சாப் சட்டமன்றத்தில் ஒருநாளும் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம்” என்றுள்ளார்.

மேற்குவங்கத்தில் ஒருநாளும் இச்சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என உறுதி எடுத்துள்ளார் மம்தா பானர்ஜி. வருகிற டிசம்பர் 16-ம் தேதி இச்சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் ஒரு மாபெரும் போராட்ட ஊர்வலத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் மம்தா.

மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் அரசுகளும் இச்சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறியுள்ளன. மத்திய அரசின் குடியுரிமை சட்ட மசோதாவில் சாதாகமாயிருக்கும் இந்து, சீக்கியர், ஜெயின், பெளத்தம், கிறிஸ்துவம் மற்றும் பார்சிகள் அதிகம் இருக்கும் பகுதிகளாக உள்ள மேற்குவங்கம், அசாம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்தான் கடுமையான எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading