ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரிப்பு -  50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய  மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு!

ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரிப்பு -  50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய  மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு!

கோப்புப் படம்

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் எந்தவித கட்டணமும் இன்றி ஆக்சிஜன் சிலிண்டர்களை மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு வழங்கத் தொடங்கியுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இதனால் நோயாளிகளுக்குத் அத்தியாவசியத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 12 மாநிலங்களில் நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுளள்து.

  மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், கோவிட் சிறப்பு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை 2 முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  100 சதவீதம் ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்து மருத்துவமனைகளுக்கு வழங்க உத்தரவிடுமாறு பல்வேறு மருத்துவமனை நிர்வாகங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன. இதையடுத்து, மஹாராஷ்ட்டிரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு முறையே 4,000 மெட்ரிக் டன் முதல் 7000 ஆயிரம் மெட்ரிக் டன் வரை மருத்துவ ஆக்சிஜன் வழங்க மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.

  Also read... 10 மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் 5 வரை ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை!

  பற்றாக்குறையை சமாளிக்க 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டர்களை, நிறுவனங்கள் இறக்குமதி செய்ய, ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதனிடையே, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் எந்தவித கட்டணமும் இன்றி ஆக்சிஜன் சிலிண்டர்களை மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு வழங்கத் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 100 டன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாநிலத்திற்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: