ஹோம் /நியூஸ் /இந்தியா /

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: பிஜூ ஜனதா தளம்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: பிஜூ ஜனதா தளம்

நவீன் பட்னாயக்

நவீன் பட்னாயக்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக முதல்வர் நவீன் பட்னாயக்கின் கட்சியில் இருந்து முதல் முறையாக வெளிப்படையான ஒரு நிலைப்பாடு வெளியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில் பாஜக அரசை ஆதரித்து வரும் கட்சியாக கருதப்படும் ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சி முதலில் இச்சட்டங்களை பாராளுமன்றத்தின் லோக் சபாவில் ஆதரித்து வாக்களித்தது. பின்னர் ராஜ்யசபாவில் ஆதரிக்காமல் விலகியது. அச்சமயம் இது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் பூரி தொகுதி எம்.பியுமான பினாகி மிஸ்ரா பரபரப்பான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். மீண்டும் புதிதாக வேளாண் சீர்திருத்த மசோதாக்களை அறிமுகப்படுத்தி அவற்றை பாராளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் விவாதித்து சட்டமாக்கலாம்.

இது தான் எங்களின் கோரிக்கையாக எப்போதும் இருந்து வருகிறது. 3 வேளாண் மசோதாக்களும் நிலைக் குழுவுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம் என்றார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக முதல்வர் நவீன் பட்னாயக்கின் கட்சியில் இருந்து முதல் முறையாக வெளிப்படையான ஒரு நிலைப்பாடு வெளியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக இந்த விவகாரத்தில் நவீன் பட்னாயக் தனது நிலைப்பாட்டை உறுதியுடன் எடுக்கவில்லை என அம்மாநில விவசாய சங்கங்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:

Tags: Farm laws, Naveen Patnaik