Home /News /national /

Citizenship Amendment Act: குடியுரிமை (திருத்த) சட்டத்துக்கான விதிகளை இறுதி செய்ய அவகாசம் கேட்கும் மத்திய அரசு

Citizenship Amendment Act: குடியுரிமை (திருத்த) சட்டத்துக்கான விதிகளை இறுதி செய்ய அவகாசம் கேட்கும் மத்திய அரசு

குடியுரிமை (திருத்த) சட்டம், 2019-கான விதிகள் இறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் கால அவகாசம் கேட்டுள்ளது.

குடியுரிமை (திருத்த) சட்டம், 2019-கான விதிகள் இறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் கால அவகாசம் கேட்டுள்ளது.

குடியுரிமை (திருத்த) சட்டம், 2019-கான விதிகள் இறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் கால அவகாசம் கேட்டுள்ளது.

2019 டிசம்பர் 12 அன்று அறிவிக்கப்பட்ட குடியுரிமை (திருத்த) சட்டம், 2020 ஜனவரி 10 அன்று அமலுக்கு வந்தது. ஆனால், இதற்கான சட்டவிதிகள் இதுவரை தயாரிக்கப்படவில்லை. ஏற்கனவே, சட்ட விதிகளை இறுதி செய்ய நான்கு முறை  அவகாசம் கேட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கான, காலக்கெடு 2022 அக்டோபர் 9 வரை நீட்டிக்க மக்களவை சட்டக் குழுவிற்கும், மாநிலங்களவை துணை சட்டக் குழுவிற்கும்  மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற நெறிமுறைகளின் படி, சட்டம் அமலுக்கு வந்த 6 மாத காலத்துக்குள் சட்ட விதிகளை வெளியிட வேண்டும். விதிகளின் படியே சட்டத்தை அமல்படுத்த முடியும். 6 மாத காலத்துக்குள் சட்ட விதிகளை இறுதி செய்யாவிட்டால்,  சட்டக் குழுவிற்கும் தகுந்த காரணங்களைக் கூறி நீட்டிப்புக் கோர வேண்டும்.

குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்தால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்கொண்டு, 2014க்கு முன்னர்  இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.

முன்னதாக மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் அரசியல் சட்டத்தில் குறிப்பிட்ட மதத்தை 'அரசு மதம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் இந்த நாடுகள் இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு மதரீதியாக இன்னல் ஏற்படுத்தியது வரலாறாக உள்ளது. இவர்கள், அன்றாட வாழ்க்கையில் தங்களின் மதஉரிமைகளை நடைமுறைப்படுத்தவும், கடைபிடிக்கவும், பிரச்சாரம் செய்யவும் தடைகளும், கட்டுப்பாடுகளும் இருப்பதால் அச்சமடைந்துள்ளனர். இத்தகையோர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். தங்களின் பயண ஆவணங்கள் காலாவதியான பின்பு அல்லது, அரைகுறையாக உள்ள நிலையில், அல்லது ஆவணங்களே இல்லாமல் இந்தியாவில் தொடர்ந்து தங்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.



ஆனால், துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர், (அல்லது) மத இன்னல்கள் போன்ற வார்த்தைகள் சட்டத்தில் இடம்பெறவில்லை. இந்த மூன்று நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் மதரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள் என்று நிரூபிக்கவில்லை என்றாலும், குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்தால் குடியுரிமை வழங்கப்படும்.

மேலும், பாகிஸ்தானில் அஹ்மாதியாவும், பலூசிஸ்தானில் பலூச்சிகளும் கடுமையான மத துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களை, இச்சட்டம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்திய ஆட்சிநிலவரைக்குள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் (14), சமயம், இனம், மதம், பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதளுக்குத் தடை(15), உயிருக்கும் உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு (21 ) போன்ற அரசியல் சட்டத்தின் பிரிவுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். குறிப்பாக, டெல்லியில் சாகீன்பாக் பகுதியில் பெண்கள் மேற்ர்கொண்ட சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் உலகளவில் பேசும் பொருளானது. சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
Published by:Salanraj R
First published:

Tags: CAA Protest, Citizenship Amendment Act

அடுத்த செய்தி