முகப்பு /செய்தி /இந்தியா / தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் இலவச உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமை விநியோகம் நிறுத்தம்..

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் இலவச உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமை விநியோகம் நிறுத்தம்..

கோதுமை விநியோகம் நிறுத்தம்..

கோதுமை விநியோகம் நிறுத்தம்..

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் 55 புள்ளி 50 லட்சம் டன் கோதுமை சேமிக்க முடியும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகம் கேரளா, பீகார், உபி உள்ளிட்ட 11 மாநிலங்களில் பிரதமரின் இலவச உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப்பொருட்களில், கோதுமை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பிரதான் மந்திர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும், சுமார் 81 கோடி பேருக்கு, மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவுதானியம் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் விரிவுப்படுத்தப்பட்ட இந்த திட்டம், அக்டோபர் வரை, ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், நடப்பாண்டு அதிக வெப்பத்தின் காரணமாக கோதுமை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதில் கூடுதலாக அரிசி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக கோதுமை ஒதுக்கீடும் நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாநில உணவுத்துறைக்கு மத்திய உணவுத்துறை செயலர் சுதான்சு பாண்டே எழுதியுள்ள கடிதத்தில், அரசின் திட்டம் இலவசம் என்பதால், பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்குவதில் தவறில்லை. தற்காலிகமாக கோதுமை ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது, முற்றிலும் திரும்பப் பெறப்படவில்லை. ஆகையால் தானியங்களை எவ்வாறு விநியோகிப்பது என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

அதிகம் அரிசி சாப்பிடும் மக்கள் இருப்பதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பிரச்சனை இல்லை என்றாலும், கோதுமைக்கு முன்னுரிமை இருப்பதால் உத்தரபிரதேசத்தில் சில சிக்கல் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும்  படிங்க: மத்தியப் பிரதேசத்தில் பசுக்கொலை சந்தேகத்தின் பேரில் பழங்குடியினர் இருவர் அடித்துக் கொலை

உள்நாட்டில் கோதுமை பயன்பாடு மற்றும் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதாசு பாண்டே தெரிவித்துள்ளார்.

நடப்பு கொள்முதல் பருவத்தில், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவில் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் 55 புள்ளி 50 லட்சம் டன் கோதுமை சேமிக்க முடியும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மத்திய உணவு அமைச்சகம் இந்திய உணவுக் கழகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், " "நடப்பண்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக, கோதுமை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைவாக உள்ளது. மே 1ம் தேதி வரை கோதுமை கொள்முதல் 16.2 மில்லியன் டன்னாக உள்ளது, இது முந்தைய ஆண்டை விட 43.85 சதவீதம் குறைவாகும்.

பற்றாக்குறையை சமாளிக்க, PMGKAY திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமைக்கான ஒதுக்கீடு 18.2 மெட்ரிக் டன்னில் இருந்து 7.1 மில்லியன் டன்னாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அரிசி ஒதுக்கீடு 21.6 மெட்ரிக் டன்னில் இருந்து 32.7 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் மே மாதத்திற்கு தேவையான உணவு தானியங்களை மாநில அரசுகள் பெரும் முன்னர், ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Central govt, Ration Shop, Wheat