Home /News /national /

டெல்லியில் உள்ள ராஜ்பாத் பெயரை, கர்த்தவ்யா பாத் என மாற்ற மத்திய அரசு திட்டம்

டெல்லியில் உள்ள ராஜ்பாத் பெயரை, கர்த்தவ்யா பாத் என மாற்ற மத்திய அரசு திட்டம்

ராஜ்பாத்

ராஜ்பாத்

ராஜ்பாத் என்பது கிங்ஸ்வே எனும் ஆங்கில சொல்லின் இந்தி மொழிபெயர்ப்பாகும். இது பிரிட்டிஷ் ஆட்சியாளர் கிங் ஜார்ஜ் V இன் நினைவாக பெயரிடப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi |
மத்திய அரசு டெல்லியில் உள்ள ராஜ்பாதையை, கர்த்தவ்யா பாத் என பெயர் மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில், காலனித்துவ ஆட்சியின் அடையாளங்கள் , ஆங்கிலேயர் காலப் பெயர்கள் முற்றிலும் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது மக்கள் உரையில் அறிவித்தார்.

தற்போது, டெல்லி இந்தியா கேட் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான ராஜ்பாத் பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டடம், பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் இல்லங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதில், இந்தியா கேட் முதல் விஜய் சவுக் வரையிலான மூன்று கிலோ மீட்டர் தூரப் பகுதி சென்ட்ரல் விஸ்டா அவென்யூ என்று அழைக்கப்படுகிறது. சிவப்பு கிரானைட் கற்கள் பதியப்பட்ட நவீன நடைப்பாதைகள்,கால்வாய்கள், பாலங்கள் என மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 8 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

இந்தியாவின் கன்டென்ட் தலைநகரம் எது தெரியுமா? சத்தீஸ்கரின் கிராமத்தில் மூன்றில் ஒருவர் யூடியூபராம் !

477 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ, சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டம் டெல்லியின் மின் வழித்தடத்திற்கு முற்றிலும் புதிய தோற்றத்தை கொடுக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தன்று முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாத் பெயர் கடமை பாதை, என பொருள்படும் கர்த்தவ்யா பாத் என பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 7 ஆம் தேதி நடைபெறும் நியூ டெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

ராஜ்பாத் என்பது கிங்ஸ்வே எனும் ஆங்கில சொல்லின் இந்தி மொழிபெயர்ப்பாகும். இது பிரிட்டிஷ் ஆட்சியாளர் கிங் ஜார்ஜ் V இன் நினைவாக பெயரிடப்பட்டது.

மழையால் ரூ.225 கோடி இழப்பு.. கவலையில் பெங்களூரு ஐடி நிறுவனங்கள் - இழப்பு குறித்து விவாதிப்பதாக முதல்வர் உறுதி

முன்னதாக பிரதமர் இல்லம் இருக்கும் சாலை ரேஸ் கோர்ஸ் சாலை என்பதில் இருந்து லோக் கல்யாண் மார்க்கம் என்று பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் பல்வேறு இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத், ப்ரயாக்ராஜ் என்று மாற்றப்பட்டது. அந்தமான் தீவுக் கூட்டத்தில் இருக்கும் தீவுகளின் பெயர்கள் வெளிநாட்டவர்கள் பெயர்களில் இருந்து இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி தீவு என்றும் ஸ்வராஜ் தீவு என்றும் மாற்றப்பட்டது. மோடியின் ஆட்சியில் இதுவரை சுமார் 30 இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Delhi, Vistara

அடுத்த செய்தி