ராகுல் காந்தியின் குடியுரிமை எங்குள்ளது? பதிலளிக்க மறுத்த மத்திய அரசு!

கடந்த ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ராகுல் காந்தியின் குடியுரிமை எங்குள்ளது? பதிலளிக்க மறுத்த மத்திய அரசு!
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: June 4, 2019, 5:17 PM IST
  • Share this:
ராகுல் காந்தியின் குடியுரிமை மீதான சர்ச்சையில் அவரது குடியுரிமை குறித்த விவரங்களை வெளியிட மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தல் நேரத்தில் ராகுல் காந்தியின் குடியுரிமை மீதான சந்தேகத்தை பாஜக-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சாமி எழுப்பினார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.

சுப்பிரமணியன் சாமி தனது அறிக்கையில், “பிரிட்டன் நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ள ராகுல் காந்தி, அந்நிறுவனக் குறிப்பில் தன் பிறந்த தேதி ஜூன் 19, 1970 என்றும் தனது தேசியம் பிரிட்டிஷ் என்றும் குறிப்பிட்டுள்ளார்” எனக் கூறியிருந்தார்.


இதற்கு ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தற்போது ஆர்டிஐ என்னும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு அனுப்பிய நோட்டீஸ் விவரம் மற்றும் அதற்கான பதில் குறித்த கேள்வியின் போது மத்திய உள்துறை அமைச்சகம், ‘ஒவ்வொரு குடிமகனுக்கும் அனுப்பிய நோட்டீஸ் விவரம் குறித்த பதிவுகள் எல்லாம் நாங்கள் பராமரித்துக்கொண்டு இருக்க முடியாது’ எனப் பதிலளித்துள்ளது.

மேலும் பார்க்க: உலகின் விலை உயர்ந்த தேர்தல் இந்திய மக்களவைத் தேர்தல்!
First published: June 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading